இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டிக்கடோரியா
கோயிலில் திருட்டு வழக்கில், 12 வயது சிறுமியை போலீசார் கைது செய்து சிறார்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு,நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அந்த
சிறுமியை ஷாஹோலுவில் உள்ள சிறார் மேம்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு
உள்ளார். பத்து கிலோ கோதுமை வாங்குவதற்காக சிறுமி கோவிலின் நன்கொடை
பெட்டியிலிருந்து (உண்டி) இருநூற்று ஐம்பது ரூபாயை எடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமியை
நீதிமன்றம் மேம்பாட்டு மையத்திற்கு அனுப்பியுள்ளது. அவர் சிறார் சிறையில்
அடைக்கப்பட்டதால், அவரின் எட்டு வயது சகோதரனும், ஆறு வயது சகோதரியும் தனியாக
இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இவர்களின் தாயும் இறந்து விட்டதால்,
இப்போ இந்த குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது என்ற மிகப்பெரிய கேள்வி
எழுந்துள்ளது.
ரஹ்லி
நகரின் எல்லையில் நான்கரை அடி உயர மலையில் அமைத்துள்ள கோயில் நன்கொடை
பெட்டியிலிருந்து பணம் திருடப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் கூறினார். இதனையடுத்து
கோயில் நிர்வாகத்தின் பேரில் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு
செய்யப்பட்டது. மேலும் கோயிலில் நிறுவப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவை
அடிப்படையாகக் கொண்டு, பன்னிரண்டு வயது சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் நன்கொடை பெட்டியிலிருந்து பணத்தை எடுத்ததை அந்த சிறுமி ஒப்புக்கொண்டு
விட்டார்.
சிறுமியின்
தந்தை அவளின் பள்ளி பையைப் பார்த்தபோது, அதில் இருந்து எழுபது ரூபாய் இருந்தது.
மற்ற பணத்திற்கு, அதாவது 180 ரூபாய்க்கு பத்து கிலோ கோதுமையை வாங்கி வீட்டிற்கு
கொண்டு வந்துள்ளால் என்பது தெரியவந்தது. கோயில் நன்கொடை பெட்டியிலிருந்து, அந்த
சிறுமி ஒரு நூறு ரூபாய் நோட்டும் மற்றும் நாணயங்களை வெளியே எடுத்ததாக தன்
தந்தையிடம் கூறியிருந்திருக்கிறார்.
ஏழாம்
வகுப்பில் படிக்கும் பன்னிரெண்டு வயது சிறுமி குடும்பத்தை பராமரித்து வருகிறார்.
அவர் தான் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு மூன்று வருடங்களாக உணவு
சமைக்கும் பொறுப்பை கவனித்து வருகிறார். உண்மையில், அந்த சிறுமியின் தாய் மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின்போது இறந்த்து விட்டார். அதன் பிறகு குடும்பத்தை
தந்தை பாதுகாத்து வருகிறார். மற்ற பணிகளை 12 வயது சிறுமி செய்துவருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக