இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காதல் அரும்புதல் :
கச்சனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அவருக்கு வேதங்களை உபதேசித்தார் அசுர குரு. கச்சனும் குருவிடம் இருந்து உபதேசம் பெற்று குருவிற்கு தேவையான பணிவிடைகளை செய்து சிறந்த சிஷ்யனாக இருந்தார். இருப்பினும் வேதங்களை சொல்லிக் கொடுத்த அசுர குரு சஞ்சீவினி மந்திரம் பற்றிய உபதேசத்தை கச்சனுக்கு சொல்லவில்லை.
இந்நிலையில் சுக்கிராச்சாரியாருக்கு தேவயானி என்ற மகள் இருந்தாள். அவள் தேவ குருவின் மகனான கச்சனின் மீது ஆசைக்கொண்டு அவரை விரும்பத் தொடங்கினாள்.
கச்சனின் மரணம் :
தேவ குருவின் மகன், சுக்கிராச்சாரியிடம் சிஷ்யனாக சேர்ந்து வேதங்களை பயின்று வரும் செய்தி அசுரர்களிடம் பரவியது. இதனால் ஏதாவது பாதகம் ஏற்படுமோ என்று அசுரர்கள் பயந்தனர். இதனால் இவனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என அசுரர்கள் முடிவு செய்தனர்.
ஒரு நாள் கச்சன் தன் குருவின் கட்டளைக்கிணங்கி ஒரு செயலை செய்ய தனியாக ஆசிரமத்தில் இருந்து வந்தான். இதை அறிந்த அசுரர்கள் கச்சனை கொல்வதற்கு சரியான நேரம் இதுதான் என அங்கு சென்று கச்சனை கொன்று விட்டனர். நெடுநேரம் ஆகியும் கச்சன் ஆசிரமம் திரும்பாததால் மிகவும் மனக்கவலையுற்ற தேவயானி இதைப் பற்றி தன் தந்தையிடம் சொல்ல விரைகிறாள்.
கச்சன் இன்னும் ஆசிரமம் திரும்பவில்லை எனும் செய்தியை தன் தந்தையான சுக்கிராச்சாரியாரிடம் சொல்கிறாள் தேவயானி. இதை கேட்டதும் சுக்கிராச்சாரியார் தன் ஞான திருஷ்டியால் நடந்து முடிந்த அனைத்தையும் தன் மகளான தேவயானியிடம் சொல்கிறார்.
கச்சன் அசுரர்களால் கொல்லப்பட்டதை தேவயானியிடம் சொல்லும் போது அதிர்ந்த அவள் கச்சனை உயிருடன் மீட்டு தர தன் தந்தையை வற்புறுத்துகிறாள். சுக்கிராச்சாரியார் தன் மகளிடம் ஏன் அவன் உயிருடன் வர வேண்டும் என எண்ணுகிறாய் என வினாவிய போது தேவயானி, கச்சன் மீதுள்ள காதலை பற்றி அவரிடம் கூறினாள்.
பிராமண தோஷம் :
தன் மகள் தன்னுடைய பரம எதிரியான தேவ குருவின் மகனான கச்சனை விரும்புவதாக சொன்ன செய்தி கவலையளித்தாலும், தன்னிடம் அடைக்கலம் என்று வந்த சிஷ்யன் இறந்ததும் (கச்சன் ஒரு பிராமணன்), ஒரு பிராமணனை கொன்றதால் தனக்கு பிராமண தோஷம் ஏற்படுமோ என கருதினார். அதுமட்டுமல்லாமல் தன் அசுர குலத்தார்களால் கொல்லப்பட்டதை பிடிக்காத அசுர குரு தன்னிடம் உள்ள சஞ்சீவினி மந்திரத்தால் கச்சனை உயிர் பெற செய்தார்.
அசுரர்களின்
வெறுப்பும், அதிருப்தியும் :
கச்சன் உயிர் பெற்ற செய்தியை அறிந்த அசுரர்கள் தங்களது குருவான சுக்கிராச்சாரியார் மீது கோபம் கொண்டனர். எனினும் அவரது சொல்லை மீறி நடக்கவில்லை. நாட்கள் கழிய கழிய அசுரர்கள் கச்சனை கொல்வதும், தேவயானி தன் தந்தையிடம் கச்சனை மீட்டுதருமாறு கேட்பதும், அசுர குரு கச்சனுக்கு உயிர் கொடுப்பதுமாக இருந்தது. இதனால் வெறுப்பும் கோபம் கொண்ட அசுரர்கள் கச்சனை கொல்ல வேறு விதமாக யோசித்தனர்.
அசுர குரு அதிர்ச்சியடைதல் :
அசுரர்கள் இந்த முறை கச்சனை கொன்று எரித்து சாம்பலாக்கினார்கள். அந்த சாம்பலை சோமபானத்தில் கலக்கி அசுர குருவிற்கே தெரியாமல் அவரை குடிக்கக் செய்தனர் அசுரர்கள். கச்சன் இன்னும் காணவில்லை என தேவயானி தந்தையிடம் கூற, அவர் தன் ஞானப் பார்வையில் கச்சனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மகளை சமதானப்படுத்துதல் :
தன்னுடைய ஞானப் பார்வையில் கச்சனை சாம்பலாக்கி சோமபானத்தில் கலந்து அசுரர்கள் கொடுத்ததை தன் மகளிடம் எடுத்துக்கூறி அவளை எவ்வளவோ சமதானப்படுத்த முயன்றார் அசுர குரு. ஆனால், தேவயானி கச்சன் இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை எனவும், நானும் மடிந்து விடுகிறேன் என்றும் கூறினாள்.
சஞ்சீவினி மந்திரம் கற்றல் :
மகளை சமதானப்படுத்த முடியாமல் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார் அசுரகுரு. மேலும் ஒரு பிராமனணை கொன்ற பாவத்தினால் தமக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்பதை அறிந்த அசுர குரு இறுதியில் கச்சனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொடுக்க முடிவெடுத்தார்.
தன் வயிற்றில் இருந்த கச்சனின் சாம்பலுக்கு உயிர் கொடுத்து அவருக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேம் செய்தார். மந்திரத்தை கற்ற கச்சனை தன் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியேறுமாறு அசுர குரு கூறினார்.
அசுர குரு கூறியவாறு கச்சன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறினார். அவ்வாறு வெளியேறியபோது அசுரகுரு இறக்கிறார். வெளிவந்த கச்சன் சஞ்சீவினி மந்திரம் மூலம் தனது குருவை உயிர் பெறச் செய்கிறார்.
காதலால் சாபம் பெறல்
:
வெளிவந்த கச்சனை கண்ட தேவயானி மகிழ்ச்சியடைகிறாள். கச்சன் வந்த நோக்கம் நிறைவேறியது. எனினும் தான் வேதம் கற்க வந்ததாகவும் தேவயானியை காதலித்து மணக்க விரும்பவில்லை என்றும் அவள் காதலை ஏற்க மறுத்து விட்டான். மேலும் நான் உனது தந்தையான சுக்கிராச்சாரியின் வயிற்றில் இருந்து வெளிபட்டதால் நான் உன் சகோதரன் என்று கூறினார் கச்சன்.
நாம் சகோதர்கள் ஆனதால் இனி நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றார். கச்சன் மீது தீராத காதல் கொண்ட தேவயானி அவன் தன்னை மணந்து கொள்ள முடியாது என்று கூறியதால் அவன் மீது கோபம் கொண்டு இனி நீ கற்ற சஞ்சீவினி வித்தை பயன்படாமல் போகட்டும் என சாபமிட்டால் தேவயானி.
தேவயானியின் சாபம் பலிக்கும் என்பதால் கச்சனும் அவளுக்கு ஒரு சாபம் இடுகிறான். இனி பிராமணன் குலத்தில் தோன்றிய எந்த ஆண்மகனும் உன்னை மணக்க மாட்டார்கள் என்றும் வேற்று குலத்தில் தோன்றியவனே உன் கணவனாக அமைவான் என்று சாபமிட்டான். இவ்வாறு அசுர குருவின் சஞ்சீவினி மந்திரத்தை பலம் இழக்கச் செய்தார் தேவகுரு.
குருவை அவமதித்தல் :
சுக்கிராச்சாரியாரிடம் உள்ள சஞ்சீவினி மந்திரத்தை செயல் இழக்கச் செய்த குருதேவருக்கு, இந்திரன் உரிய மரியாதை கொடுக்காமல் அவரை பல முறை அலச்சியப்படுத்தினார்.
தேவர்களும் பலமுறை இந்திரனுக்கு எடுத்துக்கூறியும் இந்திரன் தன் கர்வத்தாலும், தான் தேவேந்திரன் என்னும் எண்ணத்தாலும் குருதேவரை உதாசினப்படுத்தினார். பெருந்தன்மை குணம் கொண்ட குருதேவர் இந்திரனின் போக்கை தேவர்களுக்காக சகித்துக் கொண்டார்.
'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது போல ஒரு நாள் குருதேவர் வருகையை கூட கண்டுகொள்ளாமல் தேவ மங்கைகளுடன் குலாவிக் கொண்டு இருந்தார் இந்திரன். இதனைக் கண்ட குருதேவர் கோபம் கொண்டு இந்திர சபையை விட்டு வெளியே வந்தார்.
'மதியா வாசலை மிதியாதே' என்பதற்கு உரியது போல இந்திர சபையின் நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நின்றார் குருதேவர். இந்திரன் பல முறை அழைப்பு விடுத்தும் சபைக்கு செல்லவில்லை. மேலும் இந்திரனுக்கோ மற்றும் மற்ற தேவர்கள் யாவருக்கும் தெரியாத படி மறைந்துக் கொண்டார் தேவகுரு (சுக்கிராச்சாரியார் பற்றி காணும் போது இந்த நிகழ்விற்கான காரணத்தை நாம் காண்போம்).
இந்திரனின் மனமாற்றம் :
இவ்வாறு தேவகுரு மறைந்த சமயம் அசுரர்கள், தேவர்கள் மீது போர் தொடுத்தனர். சரியான குருவும், ஆலோசனையும் இல்லாமல் இந்திரன் பட்ட துன்பங்கள் பல. இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்த பிறகே தேவகுரு அருமையையும், அவரின் தேவையையும் உணர்ந்தான் இந்திரன்.
இந்திரன் தன் தவறை உணர்ந்து, தேவகுருவை அழைத்து அவருக்கு உரிய மரியாதையை அளித்தார். மேலும், தாங்கள் தேவர்களுக்கு பழையபடி சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருக்க வேண்டினார். இந்திரன் பட்ட துன்பங்களை கண்ட தேவகுருவும் இந்திரன் செய்த தவறுகளை மன்னித்து விட்டார். இயற்கையாகவே குருவிற்கு மன்னிக்கும் தன்மை அதிகம். யார் என்ன தீங்கு இழைத்தாலும் அதை மன்னித்து மறந்து விடுவார்.
குருவின் மகள் :
குருவிற்கு கச்சன் என்ற மகன் இருந்தது போல ஒரு அழகான மகளும் உண்டு. மகளும் பருவமடைந்து அரசகுமாரன் ஒருவன் மீது காதல் வயப்பட்டாள். அரசகுமாரனும் தேவகுருவின் மகளை மணம் முடிக்க தேவகுருவிடம் சென்று கேட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக