இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக சேவையாற்றி வருகிறது. சுமார் 2கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், இந்தியாவில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களில் மிக நீளமானதாகவும், முதல் கடல் பாலமாகவும் திகழ்கிறது. இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர்.
சிறப்புகள் :
பாம்பன் பாலம் இலங்கைக்கான வர்த்தக தொடர்புகளை எளிதாக்கும் விதத்தில் உள்ளது.
பாம்பன் ரயில் பாலத்தின் முக்கிய சிறப்பு, கப்பல்கள் செல்வதற்கு வசதியாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தூக்குப் பாலம். இரண்டு பிரிவாக தூக்கும் இந்த பாலத்தின் ஒவ்வொரு பக்க இரும்பு பாலமும், சுமார் 100 டன் எடை கொண்டது.
இன்று வரையிலும் பாம்பன் தூக்குப் பாலத்தை கடக்க கப்பல்கள் வரும் போது மனித சக்தியால் தான் பாலம் மேல் நோக்கி தூக்கப்பட்டு திறக்கப்படுகிறது.
தூக்குப் பாலத்தை திறக்கவும், மூடுவதற்கும் இருபுறத்திலும் ஒரு பகுதிக்கு 8 ரயில்வே ஊழியர்கள் வீதம் 16 பேர் நின்று பற்சக்கரங்களை சுற்றுவார்கள்.
அடிக்கடி கடல் சீற்றங்கள், கொந்தளிப்பும் பாலம் கட்டும்போது சவால் தந்த விஷயங்களாக இருந்தன.
மீட்டர்கேஜ் எனப்படும் குறுகிய ரயில் பாதையாக இருந்த பாம்பன் ரயில் பாலம், 2007ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது, பாலத்தின் உறுதித்தன்மையும் கூட்டப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து உள்ளது.
மாதத்திற்கு 10 கப்பல்கள் வரை இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே, தூக்குப் பாலம் திறக்கப்படும். அந்த நேரத்தில் மட்டும் கப்பல் போக்குவரத்து நடக்கிறது.
கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் வழியாக இராமேஸ்வரத்துக்கு ரயிலில் செல்வது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
எப்படி செல்வது?
சென்னை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கிறது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக பயணம் செய்யலாம்.
செல்லும் காலம் :
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
பல்வேறு கட்டணங்களில் தங்கும் விடுதிகள் மற்றும் சத்திரங்கள் உள்ளது.
இதர சுற்றுலா தலங்கள் :
முனைவர் A.P.J.அப்துல்கலாம் மணி மண்டபம்.
தனுஷ் கோடி.
அனுமார் கோவில்.
ஏகாந்த ராமர் கோவில்.
கோதண்டராமர் கோவில்.
கந்தமாதனம்.
தங்கச்சி மடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக