
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆடு
மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெண், போலீஸார் அடிப்பதை வீடியோவாக எடுத்துள்ளார்.
மணல்
கடத்தி வந்த டிரைவரிடம் பணம் கேட்டு அடித்துக் கொண்டிருந்த போலீஸாரை, ஆடு
மேய்த்துக் கொண்டிருந்த பெண் அந்தக் காட்சியை வீடியோவாக எடுத்தார்.
மிரட்டி எழுதி வாங்கும்
காவல்துறையினர்
பெரம்பலூர்
மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ.,யாகப் பணியாற்றும் அருண்குமார், மணிகண்டன் ஆகிய
இருவரும் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரணாரை என்னும் இடத்தில் வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வேகமாக டாரஸ் லாரி ஒன்று வந்துள்ளது. அதைப்
போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால்,
லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச்சென்றார். எஸ்.ஐ-க்கள் இருவரும் லாரியை
பைக்கில் துரத்தினர். கே.கே.நகர் பகுதியில் லாரி சென்றபோது, முட்டுச் சந்து
இருந்தது தெரியாமல் டாரஸ் லாரியை ஓட்டியிருக்கிறார் டிரைவர், இனிமேல்
செல்லமுடியாது என்று தெரிந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார்.
பின்பு அவரை விரட்டிச்சென்ற எஸ்.ஐ-க்கள் டிரைவரை சரமாரியாக அடித்துக்
கொண்டிருந்தனர்.
அந்த
இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெண், போலீஸார் அடிப்பதை வீடியோவாக
எடுத்துள்ளார். இதனைக் கண்ட எஸ்.ஐ.,க்கள் அந்தப் பெண் வைத்திருந்த போனைப் பிடுங்கி
அந்த வீடியோவை டெலிட் செய்ததோடு அசிங்கமான வார்த்தைகளால் பேசியிருக்கின்றனர்.
அத்துடன், `இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் பொய் கேஸ் போட்டு உள்ளே
தள்ளிவிடுவோம்' என்று மிரட்டிக்கொண்டிருந்தனர்.
இதைப்
பார்த்த இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக்கில் அதை லைவ்வாகப் பதிவிட்டிருக்கிறார். இதைப்
பார்த்த பலரும் லைவ் கமென்டில் காவல்துறையைத் திட்டித் தீர்த்தனர். இந்தத் தகவல்
திருச்சி ஐ.ஜி-க்கு தெரியவர பெரம்பலூர் எஸ்.பி.க்கு போனில் தகவல்
தெரிவித்துள்ளார்.
இதையடுத்து
எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவின்படி பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் சம்பவ
இடத்திற்குச் சென்று எஸ்.ஐ.க்கள் வைத்திருந்த போனை அந்தப் பெண்மணியிடம்
கொடுத்துள்ளார். எதற்காக அந்தப் பெண் வீடியோ எடுத்தார். அவரை தரக்குறைவாகப்
பேசியதற்கு என்ன காரணம் எந்த விஷயத்தை வெளியில் கொண்டு வராமல், மணல் கடத்தல்
பிரிவுகளில் லாரி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக