இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இதன் தாக்கமானது அங்கு வசித்துவரும்
பல உயிரினங்களை அந்நாட்டின் காடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
ஜிம்பாப்வே
நாட்டிலுள்ள ஹவாங்கே தேசிய உயிரியல் பூங்காவில் ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட
யானைகள் பசியால் உயிரிழந்துள்ளன. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி
நிலையினால் மிகப் பெரிய அளவில் பஞ்சம் நிலவிவருகிறது. இதன் விளைவாக அங்கு பல
இடங்களில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இந்தப்
பஞ்சத்தின் தாக்கமானது அங்கு வசித்துவரும் பல உயிரினங்களை அந்நாட்டின் காடுகளை
விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் வடக்கு
மட்டபெலேலாண்ட் மாகாணத்தில், அந்நாட்டின் மிகப்பெரிய தேசிய உயிரியல் பூங்காவான
ஹவாங்கே அமைந்துள்ளது.
தோராயமாக
15,000 யானைகள் வசிக்குமளவுக்கு இட வசதியுள்ள இப்பூங்காவில் சுமார் 53,000 யானைகள்
வசித்துவருகின்றன. இங்கு நிலவும் பஞ்சத்தின் காரணமாக நீர்நிலைகள் முழுவதும் வறண்டு
கிடக்கின்றது. இதைச் சமாளிக்க காட்டுயிர் பராமரிப்பு நிர்வாகமானது 400 அடி ஆழமுள்ள
கிணறுகளைப் பல இடங்களில் தோண்டி நீராதாரத்தைத் தேடி வருகின்றது.
உணவைத்தேடிப்
பல உயிரினங்கள் பூங்காவைவிட்டு வெளியேறிவரும் நிலையில், இந்தச் சூழலைக் காரணமாக
வைத்துப் பல யானைகள் வேட்டையாடப்பட்டும் வருகின்றன. இதுகுறித்துப் பேசிய
அப்பூங்காவின் நிர்வாகிகள், ``இப்பிரச்னையின் மூலகாரணமாக இடப் பற்றாக்குறையை
அடையாளம் கண்டுள்ளோம். கடந்த வருடங்களில் வேட்டையாடப்பட்ட யானைகளின் எண்ணிக்கையை
ஒப்பிடும்போது இந்த வருடம் நூறிலிருந்து இருபதாகக் குறைந்துள்ளது. மேலும், தற்போது
நிலவிவரும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து
வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்கக்
கண்டத்தின் மிகப்பெரிய யானை வசிப்பிடங்களில் ஒன்றாக ஜிம்பாப்வே திகழ்கிறது. அதன்
அண்டை நாடான போட்ஸ்வானாவில் யானைகளின் எண்ணிக்கை மிகுந்ததால் யானை வேட்டையைச்
சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளனர். அழிவு நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர
உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் மற்ற ஆப்பிரிக்க நாடுகள்
கையொப்பமிட்டுள்ளதால், ஓரளவுக்கு விலங்குகளைக் கடத்தும் போக்கைக் கைவிடவேண்டிய
சூழ்நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக