இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிவபெருமானிடமிருந்து தான் விரும்பிய வரத்தினை பெற்ற மகிழ்ச்சியில் அசுரர்களுக்கு தான் சஞ்சீவினி வரத்தினை பெற்று விட்டதாகவும், தலைநகரத்திற்கு வந்து விடுவதாகவும் தகவல் அனுப்பினார் சுக்கிராச்சாரியார். பின் தவம் மேற்கொண்ட ஆசிரமத்தை அடைந்து தான் புறப்படுவதற்கான பணிகளை செய்து கொண்டு இருந்தார்.
ஜெயந்தியின் நிலை :
சுக்கிராச்சாரியாரியின் தவத்தை கெடுக்க வந்த ஜெயந்தி அவரின் தவ முயற்சிகள் எதையும் கெடுக்காமல் ஒரு முழு சிஷ்டியாக இருந்ததால் ஜெயந்தியின் நிலை இக்கட்டாக மாறியது. காரணம் சுக்கிராச்சாரியாரின் தவத்தை கெடுக்காமல் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்து வந்ததால் தன் தந்தையான இந்திரன் என்ன செய்வாரோ என அறியாது சுக்கிராச்சாரியாரை பணிந்து வணங்கினாள்.
தன் தவத்திற்கு இடையூறு ஏற்படுத்தி, அதில் என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் தோல்வியுறச் செய்ய வந்த இந்திரலோக இந்திர குமாரி என் பெருமைகளை அறிந்து, தான் செய்ய வந்த கடமைகளை மறந்து தான் ஏற்ற சிஷ்டியைக்கான பணியை மனம் உவர்ந்து நிறைவுடன் செய்ததை மனதில் நினைத்த சுக்கிராச்சாரியார் தன்னை பணிந்து நின்ற ஜெயந்திக்கு ஆசி கூறினார்.
மேலும் உண்மையான சிஷ்டியாக செயல்பட்டு எனக்கு தேவையான பணிவிடைகளை செய்தாய். ஆகவே, இந்திரன் மகளே உனக்கு வேண்டும் வரத்தைக் கேள். என்னால் முடியுமானால் அந்த வரத்தை உனக்கு அளிப்பேன் என்று கூறினார் சுக்கிராச்சாரியார்.
தடையை ஏற்படுத்துதல் :
இதைக்கேட்ட ஜெயந்தி தன்னால் இவரின் தவத்தைத் தான் தடுக்க இயலவில்லை. இருப்பினும் இவர் பெற்ற வரத்தினை பயன்படுத்த தடையை ஏற்படுத்தலாம் என எண்ணிணாள்.
வரம் கேட்டல் :
பிரபுவே தங்களிடமிருந்து கேட்க வேண்டிய வரம் ஒன்றுள்ளது. அதை தவறாது தாங்கள் எனக்கு வழங்க வேண்டும் என கூறினாள். இதைக்கேட்ட சுக்கிராச்சாரியார் என்னால் இயலுமாயின் நான் தவறாது உனக்கு அளிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்தார்.
பிரபுவே நான் கேட்கும் வரம் தங்களால் எனக்கு கொடுக்க முடிந்தவையே என கூறினாள். மேலும், என் விண்ணப்பத்தை கேட்டு சினம் கொள்ளாமல் அந்த விண்ணப்பத்தில் உள்ள உண்மையை தாங்கள் உணர்ந்து அதற்கு பின் எனக்கு வரம் அளிக்க வேண்டும் என கூறினாள் ஜெயந்தி. அதற்கு சுக்கிராச்சாரியாரும் உன் விண்ணப்பத்தை கூறு என்றார்.
ஜெயந்தி சுக்கிராச்சாரியாரிடம் கூறியது இதுதானா? :
இந்திரனின் புதல்வியான நான் தங்களின் தவத்தை மட்டும் கெடுக்க வந்தவள் என்பதையும் தாங்கள் அறிந்து என்னை ஒரு சிஷ்டியாக ஏற்றுக்கொண்டு நான் உங்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்ய அனுமதித்தீர்கள். இந்த பெருந்தன்மையான செயலால் நான் வந்த நோக்கத்தை மறந்து என் மனதை மாற்றி உங்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்தேன்.
இதனால் என் தந்தை என் மீது மிகுந்த கோபத்துடன் இருப்பார். குறியை நோக்கி ஏயப்பட்ட அம்பு தோல்வியடைந்தால் ஏய்தவர் சினம் கொள்வது இயற்கைதான். அவரால் உங்களின் தவத்தை கெடுக்க அனுப்பட்ட இந்த அம்பான ஜெயந்தி தோல்வியடைந்து விட்டேன்.
காரணம் நான் மனமுவந்து இந்த பணியை ஏற்கவில்லை. என் மனம் உங்களின் தவத்தை தடுத்து நிறுத்தும் செயல்களில் ஈடுபடவில்லை. அப்படி நான் செய்திருந்தாலும் உங்களின் வைராக்கியத்திற்கு முன் அது தோல்வியே அடையும் என்பதை நான் அறிவேன்.
எனவே நான் வெற்றி பெறாமல் என் தந்தையின் முன் நின்றால், அவர் என் மீது சினம் கொள்ள நேரிடும். இதை தவிர்க்கவும் உங்களுக்கு தேவையான பணிவிடைகளை நான் செய்யும்போது தங்களை என் பதியாக நினைத்து விட்டேன். என் மீது சினம் கொள்ளாமல் என்னை தங்களின் பத்தினியாக ஏற்றுக்கொள்ள நீங்கள் வரமளிக்க வேண்டும் என தன் நிலையில் இருக்கும் உண்மை நிலையை மிகவும் பணிவுடன் எடுத்துரைத்தாள் ஜெயந்தி.
சுக்கிராச்சாரியாரியின் முடிவு :
ஜெயந்தி கொடுத்த விளக்கங்களை கேட்ட சுக்கிராச்சாரியார் ஜெயந்தியின் பக்கம் உள்ள உண்மையை அறிந்தார். மேலும் குருவானர் சிஷ்டியை மணந்து கொள்வது என்பது சரியானது அல்ல என்று நினைத்த அசுர குரு ஜெயந்திக்கு புரியும் விதத்தில் தம் எண்ணத்தை எடுத்துரைத்தார். ஆயினும் ஜெயந்தி இதை ஏற்றுக்கொள்ளாமல் தன் நிலையை மீண்டும் கூறி நான் உங்களை காந்தர்வ மணம் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றாள்.
ஒரு பாவை தன் மனதில் ஒரு ஆண் மகனை நினைத்து காந்தர்வ திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தால், அந்த ஆண் மகன் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்த பெண்ணை திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தர்மமாகும். காந்தர்வ திருமணம் என்பது பெண்ணின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.
ஜெயந்தி தன் விருப்பத்தை சுக்கிராச்சாரியாரிடம் சொன்னபோது சுக்கிராச்சாரியாரால் எதுவும் செய்ய இயலவில்லை. பெண்ணின் விருப்பத்தை ஏற்று நிறைவேற்றாவிடில் அது தோஷமாகும். மேலும், தவறான எண்ணங்களை பெண்கள் கூறினால் அவர்களை நல்வழிப்படுத்துதல் ஓர் ஆண் மகனின் கடமையாகும்.
எனவே சுக்கிராச்சாரியார் தேவலோக மங்கையே நீ இந்த பூவுலகில் நிரந்தரமாக தங்கி பத்தினிக்கான கடமையை சரிவர உன்னால் செய்ய இயலாது. மேலும், நீ இந்திரலோகம் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆகவே என் பத்தினியாக இருந்து கடமையை ஆற்றுவது என்பது எளிதல்ல எனக் கூறினார் சுக்கிராச்சாரியார்.
ஒப்பந்த திருமணம் :
சுக்கிராச்சாரியார் கற்ற மந்திரத்தை ஆயுள் முழுக்க நம்மால் பயன்படுத்த முடியாமல் செய்ய இயலாது, குறைந்த அளவு பத்தாண்டு காலமாவது பிரயோகம் செய்ய தடையாக இருக்கலாம் என எண்ணினாள் ஜெயந்தி.
ஆகவே, பத்து ஆண்டுகள் மட்டும் நான் உங்கள் பத்தினியாக இருந்து பத்தினி கடமைகளை சரிவர செய்கிறேன் என்று பணிவாக சுக்கிராச்சாரியாரிடம் கூறினாள் ஜெயந்தி. மேலும், இந்த பத்து ஆண்டுகளில் என் மீதான கோபம் என் தந்தைக்கு குறையும் என எடுத்துரைத்தாள்.
காந்தர்வ மணம் முடித்தல் :
சுக்கிராச்சாரியார் எவ்வளவு முயன்றும் தன் சிஷ்டியையின் மனதை மாற்ற இயலவில்லை. மேலும், தேவலோக கன்னியின் தோஷத்தை பெற விரும்பாத சுக்கிராச்சாரியார் காந்தர்வ மணத்திற்கு விருப்பம் இல்லாமல் ஒத்துக் கொண்டார்.
பின்னர் சுக்கிராச்சாரியாரும், ஜெயந்தியும் காந்தர்வ மணம் முடித்துக் கொண்டு இல்வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். இதை தம் ஞான திருஷ்டி மூலம் அறிந்தார் தேவகுரு. மேலும், அசுர குரு தலைநகரம் வந்து கொண்டு இருப்பதாக செய்தி அனுப்பியிருந்தார். ஆனால், அவர் தலைநகரம் வராமல் தவசாலையில் பத்தாண்டுகள் ஜெயந்தியுடன் தங்கி இல்வாழ்க்கையில் ஈடுபட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக