>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 16 அக்டோபர், 2019

    கருணை.!

     Image result for கருணை

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    இளைஞன் ஒருவன் ஜென் குருவிடம் வந்து நான் அனைத்தையும் அனுபவித்துவிட்டேன். எனக்கு இந்த உலகம் சலித்துவிட்டது. ஆதலால், ஐயா! நான் உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன் என்று கூறினான்.
     இதை கேட்ட குரு, மகனே! உனக்கு எப்பொழுதாவது உன்னையே மறந்துபோகும் அளவிற்கு ஆழமாக ஆர்வத்துடன் எதிலாவது ஈடுபட்டதுண்டா எனக் கேட்டார். இளைஞன் சிந்தித்துவிட்டு, எனக்கு சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு எனக் கூறினான்.
     குரு இளைஞனிடம், நீ சிறிது காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்தார். உதவியாளனிடம், பனிரெண்டு வருடங்களாக தியானம் செய்து கொண்டிருக்கும் ஒரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். குரு கூறியபடி துறவியும் வந்தார். சதுரங்க அட்டையும் கொண்டு வரப்பட்டது. அத்துறவிக்கு சிறிது சதுரங்கம் தெரியும், பனிரெண்டு வருடங்கள் தியானம் செய்து கொண்டிருந்தபடியால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.
     குரு, துறவியை பார்த்து, இது மிகவும் ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனிடம் தோற்று போனால், இந்த வாளால் உன் தலையை வெட்டி விடுவேன் என்றார்.
     பிறகு இளைஞனிடம் திரும்பி, தம்பி இந்த விளையாட்டு இப்பொழுது மிகவும் ஆபத்தாக இருக்கப் போகிறது. நீ இந்த துறவியிடம் தோற்று போனால் இந்த வாளால் உன் தலையை வெட்டி விடுவேன் என்றார். நீங்கள் இருவரும் நான் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
     இப்போது போட்டி தொடங்கியது. இளைஞனுக்கு வாழ்வா, சாவா என்ற பயம் வந்துவிட்டது. முழு உடலும் நடுங்கியது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும், அமைதியாகவும் இருந்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.
     ஆனால் சில நிமிடங்களில் இளைஞன் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது. பிறகு துறவியை பார்த்த போது, அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே துறவியின் மீது அவனுக்கு அன்பு ஏற்பட்டது. அதனால், அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில், அவன் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை.
     ஆனால் துறவி கொலை செய்யப்படக்கூடாது என்று எண்ணி, துறவியை வெற்றி பெறச் செய்வதற்காக தெரிந்தே தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேஜையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். உடனே அவர் இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள் எனக் கூறினார்.
     மகனே! நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.
     நீ செய்த செயலுக்கு பெயர் தான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக பிரதிபலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது நீ கருணை உடையவனாகிறாய். அன்பு எப்போதும் கருணை மயமானது என்று கூறினார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக