இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மணமகனை நிராகரித்தல் :
பருவமடைந்த மங்கையை ஒரு தகப்பன் தான்
விரும்பியவனுக்கோ அல்லது தன் மகள் விரும்பியவனுக்கோ அல்லது தன் மகளை விரும்பி
வந்து கேட்பவருக்கோ தகுதி இருப்பின் திருமணம் முடித்து கன்னிகாதானம் செய்வது உலக
நடைமுறையாகும். தேவகுருவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால், குருபகவானோ
அரசகுமாரரின் வேண்டுகோளை நிராகரித்தார்.
அரசகுமாரனின் விவாதம் :
அரசகுமாரன் தேவகுருவின் மகளையே தன் துணைவியாக
நினைத்துக் கொண்டிருப்பதாகவும், தங்களுடைய மகளும் என்னை கணவனாக நினைத்துக்
கொண்டிருப்பதாகவும், வேறு பெண்ணை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது எனவும்
தன் எண்ணத்தை குருதேவரிடம் கூறினார்.
காந்தர்வ திருமணம் :
நான் ஒரு சத்ரியன். நான் விரும்பிய பெண்ணையோ
அல்லது என்னை விரும்பிய பெண்ணையோ அவள் விருப்பத்தின் அடிப்படையில் எத்தனை தடைகள்
வந்தாலும் தடைகளை கடந்து அவளை மணம் செய்து கொள்ள முடியும்.
இங்கு இருவர்களின் மனமும் ஒத்துயிருப்பதால்
காந்தர்வ முறையில் திருமணம் செய்து கொள்ள இயலும். ஆனால், எங்களுக்கு இதில்
விருப்பமில்லை. தங்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே
எங்கள் இருவரின் ஆசையாகும்.
பிராணத் தியாகம் :
அரசகுமாரனும் குருவிடம், தங்கள் மகளை எனக்கு
மணம் முடித்து தராததிற்கு காரணம் என்ன என்று பணிவுடன் வினாவினான். அதற்கு குரு
எந்த காரணத்தையும் கூறவில்லை. காரணம் தெரியாமல் தங்கள் ஆசிரமத்தை விட்டு
போகமாட்டேன் என்று கூறினான்.
மேலும், தங்கள் மகளை மணமுடிக்காமல் போகமாட்டேன்
என்று கூறி ஆசிரமத்தின் முன்பு பிராணத் தியாகம், அதாவது உயிரை மாய்த்துக் கொள்வது
என்ற நிலையை மேற்கொண்டான்.
நாரத மகரிஷி வருகை :
சத்ரியன் ஒருவன் தன் ஆசிரமத்தின் முன்பு விரதம்
மேற்கொண்டு பிராணத் தியாகம் செய்தால் தனக்கு தோஷம் ஏற்படும் என்பதை அறிந்த
குருதேவர் கவலையுடன் அமர்ந்து இருந்தார். அந்த சமயத்தில் நாரதர் ஆசிரமத்திற்கு
வந்தார்.
நாரதர் நடந்த அனைத்தையும் குருதேவரிடம்
கேட்கிறார். குருதேவரும் அனைத்து விஷயங்களையும் கூறி இதற்கு தீர்வு ஏதாவது கூறுங்கள்
என வினாவினார். நாரதர் தங்களின் மகளை அரசகுமாரனுக்கு மணம் முடித்து கொடுக்காததற்கு
காரணம் என்ன என்று வினாவினார்.
காரணம் கூறல் :
மகரிஷியே என் மகளின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம்
உள்ளது. அதாவது அவள் திருமணம் செய்த முதலிரவே அவளது கணவன் இறந்து விடுவான். என்
மகளை விதவையாக பார்க்கக் கூடிய சக்தி எனக்கில்லை. அதனால் தான் நான், என் மகளை
கன்னிகாதானம் செய்து கொடுக்கவில்லை என கூறினார்.
மகரிஷி பரிகாரம் கூறல் :
இதைக்கேட்ட மகரிஷி தங்கள் மகளின் ஜாதகத்தை காண்பிக்குமாறு
கேட்டார். ஏனெனில் நாரதரும் ஜோதிடம் அளித்த பதினெட்டு ரிஷிகளில் ஒருவர். குருவும்
தனது மகளின் ஜாதகத்தை நாரத ரிஷியிடம் காண்பிக்கிறார்.
ஜாதகத்தை அலசி ஆராய்ந்த மகரிஷி ஓர் எளிய
பரிகாரம் உள்ளதே. அதை அவர்கள் இருவரும் செய்து முடித்தால் தங்களின் மகள் சகல
சௌபாக்கியத்துடன் இருப்பாள் என்று கூறினார்.
சற்று யோசித்த குரு 'நாரதர் கலகம் நன்மையில்
தான் முடியும்" என்பதை உணர்ந்து பரிகாரம் என்னவென்று கேட்டார். அதற்கு நாரத
மகரிஷி இருவருக்கும் திருமணம் செய்து முடித்த முதலிரவு அன்று அவர்கள் இருவரும்
அம்பாளுக்கு உறங்காமல் பூஜை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்தால் தோஷம் விலகும்
என்றார்.
மேலும், அவர்களுக்கு எதிரில் நீங்களும் அமர்ந்து
அவர்களை கண் இமைக்காமல், உறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு விடியும்
வரை பூஜை செய்தால் அம்பாளின் கருணையால் மாங்கல்ய தோஷம் விலகி நன்மை உண்டாகும்
என்றார் நாரத மகரிஷி.
கன்னிகாதானம் செய்தல் :
நாரத ரிஷியின் கூற்றை ஏற்றுக்கொண்டு நாரத
ரிஷியின் முன்பாகவே தன் மகளை கன்னிகாதானம் செய்து கொடுத்தார். பின் அன்றைய இரவு
முழுவதும் அம்பிகைக்கு பூஜை செய்ய மணமகன், மணமகளை தூங்காதபடி விடியும் வரை
விழித்துக் கொண்டு இருவரையும் கவனித்துக் கொண்டு இருந்தார். பொழுதும் விடிந்தது.
மணமக்கள் இருவரும் பூஜையை நல்லபடியாக முடித்துக் கொண்டார்கள்.
நாரத மகரிஷி மறுநாள் காலையில் ஆசிரமத்திற்கு
வந்தார். அவரிடம் குருதேவர் தன் மகளின் மாங்கல்ய பலத்தை காத்ததற்கு நன்றி
கூறினார். நாரதரோ, எனக்கு ஏன் நன்றி கூறுகிறீர்கள். தங்கள் மகளின் மாங்கல்ய பலத்தை
காத்ததே நீங்கள் தானே என்றார்.
குழம்பிய குருதேவர் :
நான் எப்படி என் மகளின் மாங்கல்யத்தை
காப்பாற்றினேன் என குருதேவர் நாரதரிடம் வினவினார். அதற்கு நாரதர் தங்களுடைய மகளின்
ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானத்திற்கு உங்களின் பலமான பார்வை உள்ளது. தங்களின் மகளே
பிரச்சனைக்கு உரியவள் என்பதால் உங்கள் பார்வை உள்ளதை ஆழ்ந்து கவனிக்க மறந்து
விட்டீர்கள்.
உங்கள் பார்வை மாங்கல்ய ஸ்தானத்திற்கு உள்ளது
என்று நான் கூறியிருந்தால் குழம்பி இருந்த தாங்கள் இதை மறுத்திருப்பீர்கள்.
எனவேதான் அம்பிகை பூஜை எனக் கூறி மணமக்கள் இருவரையும் தூங்காமல் பார்த்துக்
கொள்ளுங்கள் எனக் கூறினேன்.
நான் கூறியதை ஏற்று நீங்களும் தங்களின் பார்வை
முழுவதையும் மணமக்களின் மீதே வைத்திருந்தீர்கள். 'குரு பார்த்தால் கோடி புண்ணியம்"
என்பது போல தங்களுடைய மகளின் மாங்கல்யத்தில் இருந்த தோஷம் விலகியது எனக் கூறினார்
நாரதர்.
தன் பார்வையின் பலத்தைப் பற்றி இந்த நிகழ்வின்
மூலம் குருதேவர் அறிந்தார். முழுச்சுபரான குரு பல்வேறு சூழ்நிலைகளில் தன்னுடைய
பெருந்தன்மை மற்றும் பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்று கொள்ளுதல் போன்ற
உயர்ந்த பண்புகளால் அவர் தேவர்களுக்கு குருவாகி நவகிரகங்களில் முழுச்சுபர் என்னும்
அந்தஸ்தை பெற்று அண்டத்தில் தோன்றிய அனைத்து உயிர்களையும் தம் பார்வையின் பலத்தால்
காக்கிறார்.
கற்றுக்கொடுக்கும் குருவை அவமதிப்பவர்களுக்கு
நன்மை பொருந்திய இந்த குரு பார்வை அடுத்த ஜென்மங்களில் தீய பார்வையாக அமைந்து
சரியான வழிகாட்டல் இன்றி தவிக்கின்றனர்.
குரு-வினால் ஏற்படும் தோஷங்கள் :
ஒருவரின் ஜாதகத்தில் குருவின் பலம்
குறைந்தாலும் அல்லது நீசம், பகை மற்றும் மறைந்து போனாலும் கீழ்க்கண்ட பாதிப்புகளை
குரு ஏற்படுத்துவார். அவை,
1. புத்திர தோஷம்.
2. தன விஷயத்தில் போராட்ட நிலை.
3. முன்னோர்களின் சாபம்.
4. திருமண விஷயங்களில் காலதாமதம்
போன்றவையாகும்.
பரிகாரங்கள் :
வியாழக்கிழமை ஆலங்குடி சென்று குரு
பகவானை தரிசித்து, அர்ச்சனை செய்து 24 தீபம் ஏற்றி வழிபட்டு 24 முறை கோவிலை வலம்
வர குரு பகவானால் ஏற்பட்ட தோஷத்தின் வீரியம் குறையும்.
வியாழக்கிழமை நவகிரக மேடைக்கு சென்று
குரு பகவானுக்கு அரிசி மாவினால் அபிஷேகம் செய்து முல்லை மலர் கொண்டு அர்ச்சனை
செய்து வர சகல தோஷமும் நிவர்த்தியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக