Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 அக்டோபர், 2019

ஒருவழியாக Google Maps-ல் இணைந்த "கனவு" அம்சம்! ரொம்ப நன்றி கூகுள்!

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கூகுள் மேப்ஸில் மட்டுமின்றி யூட்யூப், கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்றவைகளிலும் அப்டேட்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது, தவிர Password Checkup எனும் புதிய அறிமுகத்தையும் கூகுள் நிகழ்த்தி உள்ளது.



ஒருவழியாக Google Maps-ல் இணைந்த "கனவு" அம்சம்! ரொம்ப நன்றி கூகுள்!
தனது பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமையை வழங்குதற்காகவும், பயனர்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பதற்காகவும், கூகுள் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை நிகழ்த்தி உள்ளது.

பெரும்பலான கூகுள் க்ரோம் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ‘Incognito Mode-ல் கூகுள் மேப்ஸ் இணைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் என்ன பயன்?

கூறப்படும் 'இன்காக்னிட்டோ மோட்' ஆனது கூகுள் மேப்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் தேடும் இடங்கள் பற்றிய எந்த விதமான மேப்ஸ் செயல்பாடுகளும் பயனரின் Google அக்கவுண்டில் சேமிக்கப்படாது.

ஒரு நிறை இருப்பின், ஒரு குறை இருக்கும் அல்லவா?

அதே சமயம், இன்காக்னிட்டோ மோட்டின் கீழ் நீங்கள் இயங்கும்போது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட (personalized ) அனுபவம் எதுவும் கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 
முதலில் க்ரோம் பின்னர் யூட்யூப், இப்போது மேப்ஸ்!

மறைநிலை பயன்முறை என்று அறியப்படும் Incognito Mode ஆனது கடந்த 2008 ஆம் ஆண்டு கூகுள் க்ரோமில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும், பின்னர் அது யூட்யூப்பில் இணைக்கப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கத. தற்போது இந்த அம்சம் கூகிள் மேப்ஸில் இணைய உள்ளது.

மேப்ஸில் இதை switch on செய்வது எப்படி?

கூகுள் மேப்ஸில் உள்ள உங்களை ப்ரொபைல் படத்தை டேப் செய்வதின் மூலம் மெனுவிலிருந்து நீங்கள் இந்த விருப்பத்தை தேர்ந்து எடுக்கலாம். அதன் வழியாக நீங்கள் கூகுள் மேப்ஸில் மறைநிலை பயன்முறையை இயக்கலாம்.

எந்த நேரத்திலும் அணைக்கலாம்!

ஒருவேளை உங்களுக்கு உணவக பரிந்துரைகள், பயணம் தொடர்பான தகவல்கள் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட அனுபவம் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் இன்காக்னிட்டோ மோட் விருப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அணைக்க முடியும்.

 
யாருக்கு முதலில் கிடைக்கும்?

இந்த புதிய இன்காக்னிட்டோ மோட் ஆனது இந்த மாதத்திற்குள் Android இல் வெளிவரத் தொடங்கும், பின்னர் iOS க்கு அணுக கிடைக்கும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.

யூட்யூப்பில் ஆட்டோ டெலிட் அம்சம்!

இது தவிர்த்து, கூகுள் நிறுவனம் யூடியூப் பயனர்களுக்கான ஒரு புதிய அம்சத்தினையும் அறிவித்துள்ளது. அதாவது இனிமேல் யூட்யூப் பயனர்களால் தங்களின் search மற்றும் viewing histories-ஐ குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு auto-delete செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

வாய்ஸ் ஹிஸ்டரியை நீக்கும் அம்சம்!

நிறுவனத்தின் Artificial intelligence system Assistant-ல் உள்ள வாய்ஸ் ஹிஸ்டரியை, வாய்ஸ் கமெண்டை பயன்படுத்தி பயனர்களால் நீக்க முடியும் என்றும் கூகுள் அறிவித்தது.

இந்த அறிவிப்புகளின் வழியாக கூகுள் நிறுவனம் தங்கள் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்களின் அளவை குறைக்க விரும்புவதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

பாஸ்வேர்ட் செக் அப் அம்சம்!

பாதுகாப்பு சார்ந்த விடயங்களிலும் கூகுள் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக கூகுள் அதன் Password Checkup-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இது பயனர்களின் அக்கவுண்ட்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளதா அல்லது அவர்களின் கடவுச்சொற்கள் ஏதேனும் பலவீனமாக இருக்கிறதா என்று சொல்லும் புதிய அம்சமாகும்.
 

"ஹே கூகுள்! கடைசியாக சொன்னதை அழித்து விடு." எனும் அம்சம்!

வரவிருக்கும் வாரங்களில், வாய்ஸ் கமெண்ட் மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட் செயல்பாட்டை நீக்க உதவும் ஒரு விருப்பத்தையும் கூகுள் உருவாக்க உள்ளது. அதாவது "Hey Google, delete the last thing I said to you." என்று கூற கடைசியாக நீங்கள் கூறியதை கூகுள் அசிஸ்டென்ட் டெலிட் செய்து விடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக