இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை
கொண்டுவந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து சேவைகளும்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது என்று கூறவேண்டும்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் Imessage சேவைக்குப்
போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை இந்த
RCS. பின்பு டெலிகாம் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து ஒரு வழியாக
இந்த சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம்.
கூகுள் நிறுவனம்
தற்சமயம் டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில்
இந்த புதிய சேவையை இந்தியாசில் செயல்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதைப் பற்றிய
முழுத்தவகவல்களையும் பார்ப்போம்.
எஸ்எம்எஸ் (sms)
இப்போது இருக்கும் எஸ்எம்எஸ் (sms) சேவைகள் பல
வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில்
வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை அப்போது இருந்து அதே
160கேரக்டர்கள்தான்.
எம்எம்எஸ்(mms)
அதன்பினபு போட்டோ, வீடியோ அனுப்பும் வண்ணம் வந்த எம்எம்எஸ்
சேவையும் இன்று பெரியளவில் பயன்பாட்டில் இல்லை என்றே கூறலாம். இப்போது தான்
வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற இன்ஸ்டன் மெசேஜிங் ஆப்கள் வந்துவிட்டனவே.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான
சேவைகளுக்கு மட்டுமே இந்த எஸ்எம்எஸ் சேவைகள் அதிகளில் பயன்படுகிறது, அதுவும் இந்த
ஒடிபி (otp)வேண்டி தான் பயன்படுகிறது.
RCS மெசேஜிங் என்றால் என்ன?
அதாவது எஸ்எம்எஸ் மூலம் வருமானம் பார்த்து வந்த தொலைதொடர்பு
நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபாம் குறைந்தது என்றே கூறலாம். இந்த சிக்கல்களைத்
தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட சேவைதான் RCSஎனப்படும் Rich Communication Service.
இந்த சேவை எஸ்எம்எஸ் போல எழுத்துக்கள் மட்டும் இருக்காது,
படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யலாம். க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், Qr கோடு
என இன்னும் பல வசதிகள் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும்
இதற்கு டேட்டா சேவையை பயன்படுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.
enable செய்ய
குறிப்பாக allo, Hangouts என்று மெசேஜிங் தொடர்பான சேவைகளை
அறிமுகப்படுத்தி தோல்வியை கண்ட கூகுள் பல தடைகளைக் கடந்து இந்த RCS சேவை
இறுதியாகக் கொடுக்கத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சேவையை enable செய்ய உங்கள் கூகுள்
message ஆப்பின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும், அதில் general பிரிவுக்குச்
சென்று chat features தேர்வு செய்து enable chat Features என்பதை கிளிக் செய்தல்
வேண்டும்.
விரைவில்
தற்சமயம் சில மொபைல்களில் மட்டும்தான் இதற்கான சப்போர்ட்
கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக