இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தண்ணீர், உணவு என மனிதனின் அணைத்து அன்றாட
தேவைகளுமே தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது நாம் அறிந்தது. ஆனால், பேச்சுவாக்கில்
பாருங்கள் காற்றையும் ஒரு நாள் விலை குடுத்து வாங்கணும் என நக்கலாக
சொல்லியிருப்போம். அது தற்போது உண்மையிலேயே சாத்தியமாகிவிட்ட அவலநிலை
ஏற்பட்டுள்ளது. எந்த ஊரில் தெரியுமா?
வேறெங்கும் இல்லை. நம்ம தலைநகராகிய டெல்லியில்
தான். அதாவது, மற்ற இடங்களை விட நம் இந்தியாவின் தலை நகராகிய டெல்லியில் காற்றின்
நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு ஒரு பொருளை பார்ப்பதற்கே காத்திருக்க
வேண்டும் போல, அப்படி பட்ட காற்று மாசுபாடு.
இப்படிப்பட்ட காற்று மாசுபாட்டால் ஆரோக்கியமாக
இருப்பவர்கள் உடல் நிலை மோசமடையவும், உடல் நிலை சரியில்லாதவர்கள் இறக்கவும் கூடிய
நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் பார் ஒன்றை ஒருவர்
அமைத்துள்ளார்.
அங்கு ஒரு நாளுக்கு 15 பேருக்கு மேல்
வருவார்களாம். 1 மணி நேரத்திற்கு 299 ருபாய் தற்போது வரை வசூலிக்கப்படுகிறது. போக
போக இன்னும் அதிகரிக்கும் என கூறுகிறார் உரிமையாளர். அந்த காற்றிலும் லெமன்கிராஸ்,
ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் ஆகிய 7
நறுமணங்களை கலந்து தேவையானதை கொடுப்பார்களாம். மனிதர்களாகிய நமது செயல் பாட்டால்
இறைவன் நமக்கு கொடையாக கொடுத்த காற்றை கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக