இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேசிய நெடுஞ்சாலையில்
பயணிக்க வாகனங்களுக்கு வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக்
கட்டயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் வசதியில்லாத வாகனங்கள், பாஸ்டேக் தடத்தின்
வழியே சென்றால், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேடியோ
ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன்
ரேடியோ
ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு
சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட் டேக் என்பது. சுங்கச்சாவடியில்
வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும். இந்த ஃபாஸ்ட்
டேக் உங்கள் வாங்கி இணையதள வாலெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பணம்
தானாகக் கழித்துக்கொள்ளப்படும்
மொபைல்
ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து
வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த ஃபாஸ்ட் டேக்
ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும்.
இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும்
தவிர்க்கப்படும்.
ஃபாஸ்ட்
டேக் முறை
மத்திய சாலை
போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை போல், தேசிய நெடுஞ்சாலையில் ஊழல்
அனைத்து லேன்களும் தற்பொழுது ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி டோல் கட்டணங்கள்
ஃபாஸ்ட் டேக் முறைப்படி டிஜிட்டல் முறையில் மட்டுமே அனைவரிடமும் வசூலிக்கப்படும்.
அபராதமும்
வசூலிக்கப்படும் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் பணம் மூலம் கட்டணம் செலுத்த ஒரே ஒரு லேன்
மட்டும் கேஷ் வாங்கும் டோலாக செயல்படும் என்றும், பணம் மூலம் டோல் கட்டணம்
செலுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபாஸ்ட் டேக் கணக்கில் தொகை இல்லாமல் டோல் கேட்டை
கடப்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக