இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஹைலைட்ஸ்
1.
நவம்பர் 5-ஆம் தேதி, HMSI ஒப்பந்தத்
தொழிலாளர்களின் பட்டியலைக் கொண்டு வந்தது, அவர்களின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது
என குறிப்பிட்டு, காலவரையற்ற விடுப்பில் அனுப்ப நிர்வாகம் முயற்சித்தது.
2.
நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு பதிலடி
கொடுக்கும் விதமாக, தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேற மறுத்து ஆலைக்கு வெளியே ஒரு
போராட்டத்தைத் தொடங்கினர்.
3.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்
முயற்சியில் நிர்வாகம் "எதிர்கால சந்தை தேவைகளின் அடிப்படையில் தேவையான
ஆட்சேர்ப்பு குறித்து பரிசீலிக்கப்படும்" என்று குறிப்பிட்டது.
2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த
தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக குர்கானின் மானேசரில் உள்ள ஹோண்டா
மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) பிரைவேட் லிமிடெட் ஆலை
ஞாயிற்றுக்கிழமை காலவரையின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பினை நிறுவனத்தின்
நிர்வாகம் மேலாண்மை குழு ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்
தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நவம்பர் 5-ஆம் தேதி, HMSI
ஒப்பந்தத் தொழிலாளர்களின் பட்டியலைக் கொண்டு வந்தது, அவர்களின் ஒப்பந்தம்
காலாவதியாகிவிட்டது என குறிப்பிட்டு, காலவரையற்ற விடுப்பில் அனுப்ப நிர்வாகம்
முயற்சித்தது. நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேற மறுத்து ஆலைக்கு வெளியே ஒரு போராட்டத்தைத்
தொடங்கினர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்
முயற்சியில் நிர்வாகம் "எதிர்கால சந்தை தேவைகளின் அடிப்படையில் தேவையான
ஆட்சேர்ப்பு குறித்து பரிசீலிக்கப்படும்" என்று குறிப்பிட்டது. எனினும்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
இதுகுறித்து HMSI ஊழியர் சங்கத்தின்
தலைவர் சுரேஷ் கவுர் கூறுகையில், முட்டுக்கட்டைகளை உடைக்க நிர்வாக மற்றும்
தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, ஆனால்
இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், HMSI-ன் நிரந்தரத்
தொழிலாளர்கள் போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்கி அவர்களுக்கு
ஆதரவு தெரிவிப்பதாகவும் கவுர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் MLA சிரஞ்சீவ் யாதவ் உட்பட
பல அரசியல் தலைவர்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை
சந்தித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மற்ற
தொழிலாளர் அமைப்புகளும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன. அகில இந்திய
தொழிற்சங்க கவுன்சிலின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலைக்கு வருகை தந்து வெளியே
போராட்டத்தை நடத்தும் தொழிலாளர்களுடன் இது குறித்து பகிர்ந்துக்கொண்டதாக
தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக