இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தன்னலம்
கருதாது மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!!
இதுவரை
உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து
பெயர்ச்சி அடைந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு இனிவரும் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சாரம் செய்ய உள்ளார்.
நீங்கள்
அஷ்டமச் சனியின் பிடிபட்டு, விடுதலை இன்றி தவித்து வந்த காலம் மாறி இப்போது
சனிபகவான் அனைத்துவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளிக்கொடுத்து மங்கள சனியாக
வருகிறார்.
சனி
தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஏழாம்
பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ருண ரோக ஸ்தானத்தையும்
பார்க்கிறார். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
எதிர்பார்த்த வங்கிக்கடன் சமயத்தில் கைகொடுத்து உதவும்.
மனதில்
புதிய நம்பிக்கையும், தெளிவும் பிறக்கும். வெளிவட்டார நண்பர்களிடம் வாங்கிய பணத்தை
சரியான நேரத்தில் கொடுத்து நற்பெயரை தக்க வைத்துக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
:
சக
பணியாளர்களின் ஒத்துழைப்பு சில நேரங்களில் ஏற்ற இறக்கமாக அமையும். சிறு குறு
தொழில் செய்யும் பணியாளர்களுக்கு தங்களது தொழிலில் அலைச்சல் மூலம் லாபகரமான சூழல்
ஏற்படும்.
வியாபாரிகளுக்கு
:
சமுதாயத்தில்
உள்ள பெரிய மனிதர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவுகள் தங்களுக்கு முன்னேற்றமான சூழலை
உண்டாக்கும். சுயதொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் சாதகமாக அமையும்.
பெண்களுக்கு
:
உத்தியோகம்
சார்ந்த புதிய முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் வெற்றி உண்டாகும். உத்தியோகம்
சார்ந்த ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம்
உரையாடும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு
:
பிரச்சாரங்களில்
புதிய வாக்குறுதிகள் அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். சமூக
பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். கட்சி தொடர்பான விவகாரங்களை
மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.
கலைஞர்களுக்கு
:
முயற்சிக்கேற்ற
முன்னேற்றமான சூழல் சற்று காலதாமதமாக அமையும். சக கலைஞர்களால் சாதகமான வாய்ப்புகள்
உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மூத்த நபர்களின் ஆலோசனைகளை கேட்டு
செயல்படவும்.
மாணவர்களுக்கு
:
அன்றைய
பாடங்களை அன்றே படிப்பது நன்றாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல்
ஏற்பட்டு மறையும். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண் விழித்து இருக்காமல் இருப்பது
நல்லது. விளையாட்டுத்துறையில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.
விவசாயம்
:
விவசாயம்
மேன்மையான முன்னேற்றத்தையே தரும். கோதுமை போன்ற பயிர்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
நீர் பாசன நிலை அமோகமாக இருக்கும். புதிய வீடு, மனை வாங்கும் நிலை உண்டாகும்.
வழிபாடு
:
திருநள்ளாறு
சென்று சனிபகவானை தரிசித்து வருவதன் மூலம் சுபிட்சம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக