இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மின்சாரக் கார் தயாரிப்பில் எப்படி டெஸ்லா நிறுவனம் மாபெரும் புரட்சி செய்ததோ, அதே போல் கார் டிசைனில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கார்களை மட்டுமே தயாரிக்கும் எலான் மஸ்க்-இன் டெஸ்லா இந்த முறை டிரக் அதாவது பெரிய ரகக் கார்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இதுவும் எலக்ட்ரிக் கார் தான் ஆனால் வடிவில் முற்றிலும் மாறுபட்டது. இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், போட்டிப்போடவும் முடியாமல் தவித்து வருகிறது சக கார் தயாரிப்பு நிறுவனங்கள்
டெஸ்லா சைபர்டிர்க்
ஹாலிவுட் சையின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வருவதுபோன்ற ஒரு தோற்றத்தில் ஒரு காரை பார்த்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். ஆனால் உண்மையில் அது யார் செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
டெஸ்லா தற்போது அறிமுகம் செய்திருக்கும் சைபர்டிர் கார் AeroDynamic டிசைன் வடிவம் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த டிசைன் ஹாலிவுட் படங்களான Blade Runner மற்றும் 1977ஆம் ஆண்டு வெளியான The Spy Who Loved Me என்கிற ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் கார்களைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
மாருதி சுசூகி
இதே வடிவத்தை நம்ம நாட்டு மாருதி சுசூகியோ அல்லது மஹிந்திரா-வோ வெளியிட்டு இருந்தால் நாம் எல்லோரும் சிரித்திருப்போம், இது மறுக்க முடியாத உண்மை.ஆனால் டெஸ்லா இந்தக் காரின் வடிவத்தைப் பல கோணங்களில் ஆய்வு செய்து தற்போது சந்தையில் கிடைக்கும் கார்களுக்கு ஈடு செய்யும் வகையில் அனைத்தும் இந்தக் கார்களிலும் உள்ளது.
சொல்லப்போனால் மேம்பட்ட சேவைகளும், அதிக இட வசதிகளும் இந்தக் காரில் உள்ளது என டெஸ்லா தெரிவித்துள்ளது.
விலை
டெஸ்லா-வின் சைபர்டிரக் 3 மாடல்களில் வருகிறது. சிங்கிள் மோட்டார் கொண்ட கார் 39,900 டாலரும், டபுள் மோட்டார் கொண்ட கார் 49,900 டாலரும், மூன்று மோட்டார் கொண்ட கார் 69,900 டாலர் விலையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் டெஸ்லாவின் Self Driving வசதி வேண்டுமென்றால் தனியாக 7000 டாலர்.
இந்தக் காரை புக்கிங் செய்ய வெறும் 100 டாலர் போதும் என்பது தான் கூடுதல் சிறப்பு. மேலும் நீங்கள் இப்போது ஆர்டர் செய்தால் 2021ஆம் ஆண்டு உங்கள் கார் டெலிவரி ஆகும்.
டிசைன் புரட்சி
டெஸ்லா-வின் இந்த டிசைன் புரட்சி உலகளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டியை மட்டுமல்ல புதிய வர்த்தக வழியையும் உருவாக்கியுள்ளது.ஆனால் இது எல்லோருக்கும் வெற்றி வாய்ப்பை தருமா..? என்றால் அது நிச்சயம் கிடையாது. இந்த வெற்றி அனைத்தும் கார்களின் தரத்தை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்யப்படும்.
ஆட்டோமொபைல் துறையில் டெஸ்லா தான் இனி கிங்மேக்கர்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக