Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 நவம்பர், 2019

55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.!


 பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி








                                          

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


                                                                                                    ஸமார்ட்போன்கள் வருவதற்கு முன்பு சிறப்பான போன் என்றால் அது நோக்கியா மட்டும் தான். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு நோக்கியா பீச்சர்போன் மாடல்களுக்கு அதிக வரவேறப்பு இருந்தது, காரணம் சிறந்த தரம்,அருமையான கீபேட், மற்றும் சிறந்த வடிமைப்பு, ஸ்னேக் கேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருந்தது.
பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி
இந்நிலையில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் நோக்கியா களமிறங்கவுள்ளது என அனைவரும் தெரியும், குறிப்பாக இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து ஸமார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
55-இன்ச் டிஸ்பிளே
இப்போது வந்த தகவல்களின் அடிப்படையில் 55-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4கே யுஎச்டி ரெசல்யூசன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தர நிர்ணய பணியகம்
பிளிப்கார்ட் நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய பணியகம்) சான்றிதழ் அளித்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை விரைவில் எதிர்பார்க்கலாம்.


ஆண்ட்ராய்டு பை
டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி,தயாரிப்பில் உள்ள நோக்கியா ஸ்மார்ட் டிவி,ஆண்ட்ராய்டு பை-க்கு வெளியே இயங்க வாய்ப்புள்ளது. சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட் டிவிகளைப் போலவே, இதுவும் கூகிள் பிளே ஸ்டோருடன் முன்பே நிறுவப்பட்டிருப்பதாகவும்,சிறந்த மாறுபட்ட விகிதத்தை வழங்கும் நுண்ணறிவு டிம்மிங் போன்ற அம்சங்களுடன் வருவதாகவும் கூறப்படுகிறது.
பட்ஜெட் விலை
நோக்கியா அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஒன்பிளஸ் டிவி, மோட்டோரோலா டிவி மற்றும் மி டிவி சாம்சங் டிவி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும்
நோக்கியா நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட்
நோக்கியா டிவி ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர் ஆதரகளுடன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக