>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 21 நவம்பர், 2019

    அமேசான், பிளிப்கார்ட் அதிரடி டிஸ்கவுண்ட்.. கொந்தளிக்கும் வணிகர்கள்.. 700 நகரங்களில் திரண்டனர்

     Image result for அமேசான், பிளிப்கார்ட் அதிரடி டிஸ்கவுண்ட்.. கொந்தளிக்கும் வணிகர்கள்.. 700 நகரங்களில் திரண்டனர்



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றின் "நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு" எதிராக எதிர்ப்பு தர்ணாக்களை நடத்தியதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.
    இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுகின்றன என்றும், அரசின், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வெளிப்படையாக மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள வர்த்தகர்கள் அமைப்பு, இந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் கலந்து கொண்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
    "ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள், இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை தங்களது நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அரசின் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வெளிப்படையாக மீறுவதன் மூலம் மிகவும் நச்சுத்தன்மையடையச் செய்துள்ளன" என்று கண்டித்தனர் என்கிறது அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு.
    அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டின் இ-காமர்ஸ் போர்ட்டல்களுக்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வர்த்தகம் செய்வதில் வர்த்தகர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் பிற வணிகர்களைப் போலவே, இந்த இ-காமர்ஸ் நிறுவனங்களும் அரசாங்கத்தின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) கொள்கை மற்றும் பிற வரிச் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று CAITன் தேசியத் தலைவர் பி.சி.பார்டியா கூறினார்.
    இந்த நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களை அன்னிய நேரடி முதலீடு கொள்கை மற்றும் பிற சட்டங்களுடன் முழுமையாக இணக்கமாக மாற்றும் வரை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போர்ட்டல்களை மூட வேண்டும். இந்த் நிறுவனங்களின் வணிக மாடல்கள், கணக்குகள் மற்றும் அந்நிய முதலீட்டின் வருகை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.
    நாட்டில் 70 மில்லியன் வணிகர்களின் வணிகத்தை அழிக்க இ-காமர்ஸ் நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டும் CAIT, ஏற்கனவே இந்த நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் புகார் அளித்துள்ளது.
    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் பெஞ்சிலும் இந்த அமைப்பு சார்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதிகப்படியான டிஸ்கவுண்ட் விலையில் இவ்விரு நிறுவனங்களும் விற்பனை செய்வதுதான் இந்த எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக