இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மிகப்பெரிய
அளவுடைய கிட்னியை அறுவை சிகிச்சை செய்து நீக்கி டெல்லி மருத்துவர்கள் சாதனை
படைத்துள்ளனர்!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.
அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கிட்னியின் சராசரி எடை அளவு 120 முதல் 150 வரை கிராம் மட்டுமே. இந்நிலையில், சுமார் 7.4 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய அளவுடைய கிட்னியை அறுவை சிகிச்சை செய்து நீக்கி டெல்லி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நோயாளி ஒருவர் 'ஆட்டோசோமால் டாமினன்ட் பாலிசிஸ்டிக்' என்ற சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சுவாசிப்பதில் பெரும் பிரச்னை நிலவியது. அதோடு உறுப்பு முழுவதும் நீர்க்கட்டிகள் வளரும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த பாதிப்பு தீவிரமானதையடுத்து, சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நோயாளி உடலில் இருந்து 7.4 கிலோ எடையுள்ள கிட்னியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மனித உடலில் இருந்து 4.25 கிலோ எடைகொண்ட கிட்னி அகற்றப்பட்டதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் நோயாளிக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது கிட்னி வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிதாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை என கூறியுள்ளனர்.
மேலும், கின்னஸ் கமிஷனில் தாங்கள் அகற்றிய மிகப்பெரிய சிறுநீரகத்தை உலக சாதனையாக சமர்ப்பிக்கலாமா என்று மருத்துவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக