Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 நவம்பர், 2019

பகுத் அச்சா முகேஷ் அம்பானி..! 8 மாதத்தில் 70,000 கோடி சம்பாத்தியம்..!


Image result for அம்பானி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இந்திய பொது ஜனத்துக்கு பணத்தைப் பற்றிய பொது சிந்தனை ஒன்று தான். அந்த வெகு ஜனத்துக்கு போட்ட காசு வரவில்லை என்றால் தான் நஷ்டம் என்போம்.
ஆனால் பணக்காரர்களுக்கு போட்ட காசு பல மடங்காக திரும்ப வரவில்லை என்றாலே நஷ்டம் என்பார்கள். அதாவது லாபத்தில் நஷ்டம் பார்ப்பது பணக்காரர்கள் வழக்கம். "100 கோடி லாபம் வரும்னு எதிர்பார்த்தேன். 84 கோடி தான் லாபமா..? சரி விடுங்க 16 கோடி லாபத்தில் நஷ்டம்" என்பார்கள்.
இப்படி கணக்குப் பார்த்தே இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல சாதனைகளைச் செய்துவிட்டார். அந்த சாதனைகளைப் பார்ப்பதற்கு முன் கொஞ்சம் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனைப் பார்த்து விடுவோம்.
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்
பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு விலை இருப்பதைப் போல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அதாவது இன்றைய விலைக்கு அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம். இந்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனை வைத்து தான் அம்பானி 8 மாதத்தில் 70,000 கோடி சம்பாதித்து இருக்கிறார்.
9.9 லட்சம் கோடி
இன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை சமீபத்தில் 1576.35 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம். ஆக, 633 கோடி பங்குகள் * 1576.35 = 9.9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது. இது இந்திய வரலாற்றிலேயே புதிய உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயரத்தை இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய சாதனை என்றாலும், அம்பானிக்கும் தனிப்பட்ட முறையில் லாபம் கொடுத்து இருக்கிறது. எனவே பங்கு விலையில் இருந்து தொடங்குவோம்.
 பங்கு விலை
அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தற்போது 1,569 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே அதன் சந்தை மதிப்பு 9.95 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த 2019-ல் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி பங்குகள் விலை சுமாராக 40 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
ஏற்றம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20 வர்த்தக நாட்களில் 8 லட்சம் கோடியில் இருந்து 9 லட்சம் கோடிக்கு வந்துவிட்டது. மீண்டும் அடுத்த 21 வர்த்தக நாட்களில் 9 லட்சம் கோடி முதல் 10 லட்சம் கோடிக்கு மிக நெருக்கமாகச் சென்று இருக்கிறது. ஆனால் இதுவரை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டதாக செய்திகள் வெளியாகவில்லை. சரி அவர் சொத்து மதிப்புக்கு வருவோம்.
60 பில்லியன் டாலர்
கடந்த மார்ச் 2019-ல் ஃபோர்ப்ஸ் நிறுவன கணிப்பின் படி, முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். ஆனால் இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்வு போன்ற சில காரணங்களால், இப்போது நம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்து இருக்கிறது தெரியுமா..? 10.1 பில்லியன் டாலர் (60.1 பில்லியன் டாலர்).
இந்திய மதிப்பில்
ஆக, கடந்த எட்டு மாதங்களில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து இருக்கிறது. அப்படி என்றால் 1000 கோடி டாலர் * 70 = 70,000 கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது. அடுத்த என்ன அம்பானி ஜி... 70 பில்லியன் டாலர் தான் இலக்கா...? நீங்க தொட்டாலும் தொட்ருவீங்களே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக