Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 16 நவம்பர், 2019

உஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா?- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்

 Image result for உஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா?- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சமூகவலைதளங்களில் தவிர்க்க முடியாத ஒன்று பேஸ்புக். இதில் கணக்கில்லாதவர்கள் என்றால் சொர்ப்பம். பேஸ்புக்கில் பெரும்பாலானோர் இதை கவனித்திருப்போம், நமக்கு என்ன தேவையோ அதை பேஸ்புக்கில் தொடர்ச்சியாக விளம்பரமாக வந்து கொண்டிருக்கும். அது எப்படி என்ற கேள்வி எழுகையில், நமது தேவையை ஒருமுறை இணையத்தில் தேடினால், அதுகுறித்து தொடர்ச்சியாக விளம்பரம் வரும் என்றும் மொபைல் போன் மைக் மூலம் பேஸ்புக் ஒட்டுக்கேட்கிறது எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

 கேமரா ஓபனாகுவதை கண்டுபிடித்த நபர்...

இந்த நிலையில், ஐபோனில் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது கேமரா ஓபன் ஆகிறது என்பதை ஜொஷூவா மேடக்ஸ் என்பவர் கண்டுபிடித்து, அதை வீடியோவாக பதிவு செய்து டுவிட்டரில் வெளியிட்டார். இவரை தொடர்ந்து பலரும் தங்களுக்கும் இதுபோன்ற நேர்ந்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த விவகாரம் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
 கேமரா ஓபனாகுவதற்கான காரணம்...
இந்த நிலையில் ஐபோனில் பேஸ்புக்கை பயன்படுத்தும் போது கேமராவை பேஸ்புக்கால் உபயோகிக்க முடியும் என்ற குற்றச்சாட்டை பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஆப்பில் போனில் உள்ள பக் என்ற ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என கூறியுள்ளது.

ஓபனில் இருக்கும் ஆனால் அப்டேட் செய்யமாட்டோம்: பேஸ்புக்

அதேபோல் இதுகுறித்து பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பேஸ்புக்கை பயன்படுத்தும் போது நியூஸ் பீட்டில் இருக்கும் படங்கள் கிளிக் செய்யும் போது கேமரா தாமாக அக்சஸ் ஆகிறது எனவும் ஆனால் இதன்மூலம் எந்த அப்டேட்டும் செய்யப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தனிநபர் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் என யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகள்

சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூகவலைதளமான பேஸ்புக்கில் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பேஸ்புக் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு மன்னிப்பும் கோரியது. இந்த விவகாரத்துக்கு நடுவில் தற்போது பேஸ்புக் உபயோகிக்கும் போது கேமராவும் ஓபன் ஆகிறது என்ற குற்றத்தையும் பேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அரசியல் ரீதியாகவும் பேஸ்புக் நிறுவனம் ஒருதலைப்பட்சம் காட்டுகிறது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுதான் வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக