Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 16 நவம்பர், 2019

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உணடாகும் நன்மைகள்...!!

 Image result for பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உணடாகும் நன்மைகள்...!!
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
  • ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
  •  பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
  •  பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
  •  பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
  •  தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
  •  பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
  •  பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
  •  பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
  •  பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
  •  பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக