இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சனி மகாப்பிரதோஷம்...!!
பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை
வழிபட உகந்ததாக கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு
பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம்
எனவும் அழைக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை
திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம்
எனப்படுகிறது. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாப்பிரதோஷம்
என்று அழைக்கப்படுகிறது. அதன்படி வரும் சனிக்கிழமை (09.11.2019) சனி மகாப்பிரதோஷம்
வருகிறது. பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.
விரத முறை :
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும்
வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம்
சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர்
ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்றுமுறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும்
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும்,
இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில்
செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
பிரதோஷ பலன்கள் :
பிரதோஷ
தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சுபமங்கலம், நல்லெண்ணம், நல்லருள் கிடைக்கும்.
பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும்,
நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும்
பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம்
செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம்
இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு
விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில்
மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு
எளிதில் வெற்றி கிடைக்கும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால்
சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத்தன்று
செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக்
கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சனி மகாப்பிரதோஷம் :
பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே
சிவனை தரிசிப்பது சிறப்பைத் தரும். மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம்,
தானம், ஜெபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத்
தரும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து
வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனிப்பிரதோஷம்,
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்களை போன்று ஆயிரம் மடங்கு பலன்களை தரக்கூடியது
ஆகும்.
சனிப்பிரதோஷத்தன்று
மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து
அபிஷேகம் செய்து நந்தியம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக