Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

பாம்பின் செயல்..!


Image result for பாம்பின் செயல்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


ஒரு காட்டில் வயதான நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கு ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார். அந்த பாம்பு அவரிடம் சென்று பணிந்து நின்றது. முனிவரும், பாம்பைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும். தயவு செய்து எனக்கு உபதேசம் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டது.

அதற்கு முனிவரும், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும். உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி வழங்கினார். அதைக்கேட்டு மகிழ்ந்த பாம்பு முனிவரை வணங்கி விடைபெற்றது. சில நாட்கள் கழிந்தன. காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் சென்றது.

ஊருக்குள் சென்ற அந்தப் பாம்பு ஒரு மைதானத்தில் உலாவியப்படி இரை தேடிக்கொண்டு இருந்தது. அப்போது அங்கே விளையாட வந்த சிறுவர்கள் பாம்பைப் பார்த்து அலறினார்கள். ஆனால், அந்தப் பாம்பு யாரையும் எதையும் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ... சூ.. எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர்.

அப்போது அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது. பாம்பிற்கு கண் தெரியாது போலடா, அதனாலதான் நம்மை பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுது! என்று ஒரு சிறுவன் கூறியதும், மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் மீது கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது. அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காமல் மெல்ல மெல்ல ஊர்ந்து பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.

பிறகு பாம்பு இரவு நேரத்தில், அந்த இடத்தை விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது. உடல் முழுவதும் காயத்துடன், ரத்தம் சிந்தியவாறு வலியுடன் நகர்ந்துக் கொண்டே முனிவரிடம் சென்றது. ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். அதற்கு பாம்பு, சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டேன். அதனால், ஊருக்கு வெளியே இருந்த மைதானத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது. அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதனுடைய காயத்திற்கு மருந்து போட்டபடி பேசினார். உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்ட வேண்டியதுதானே? என்றார்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று புரியாமல் அந்த பாம்பு கேட்டது. அதற்கு முனிவர், உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள், நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றார். உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே என்று யோசித்தது. சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்து அதன்மீது கல் எடுத்து அடிக்க முயன்றனர்.

ஆனால், பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு சென்று விட்டனர். பாம்பிற்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அதன்பிறகு அந்த பாம்பு, அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்து வாழ்ந்து வந்தது. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு இல்லை என்பதைப் புரிந்து கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக