இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திண்டிவனத்தில், மொபையில் போனை திருடி விட்டு அதன் உரிமையாளரிடமே பேரம் பேசியவரை
காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நளினி. இவரது செல்போன் சில தினங்களுக்கு முன் காணாமல் போகி உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதற்கிடையில், நளினிக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அந்த தொலைபேசி அழைப்பின் வழியாக, “உன் போன் என்கிட்டதான் இருக்கு, அது உனக்குத் திருப்பி வேணும்னா என்கிட்ட காசு கொடுத்துட்டு வாங்கிக்கோ” என நளினியிடம் செல்போனை திருடியவர் பேசியுள்ளார். அதிர்ந்துபோன நளினி அவரை கராரான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நளினி இந்த அழைப்பு குறித்து காவல்துறையில் தெரிவித்துள்ளார்.
நளினிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என செல்போன் டவரிலிருந்து வந்த
சிக்னலை வைத்து கொள்ளையன் இருக்கும் இடத்தை காவல்துறையினர் நெருங்கினர். அங்கு சந்தேகத்துக்கு
இடமாக நின்று கொண்டிருந்த அய்யனார் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்தான் நளினியின் செல்போனை திருடியவர் என்பது கண்டறியப்பட்டது. மேலும் அவரிடமிருந்து 32 செல்போன்களும், ஒரு மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டது. அதேபோல், இவர் கொள்ளையடிக்கும் செல்போன்களை விற்றுக் கொடுக்க, திருவண்ணாமலையைச் சேர்ந்த சுதாகர் என்பவரும் உதவியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுதாகரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக