இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் அதிகமான கடனில் சிக்கி
தவிக்கும் நிலையில் புதிய முதலீடுகளை செலுத்தாமல் ஐடியா நழுவுவதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மத்திய அரசுக்கு
செலுத்த வேண்டிய கடன் 99 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து
தீர்ப்பு வெளியிட்ட நீதிமன்றம் கடன் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டது. அதிகமான
கடன் சுமையால் லண்டனை தலைமையகமாக கொண்ட வோடஃபோன் நிறுவனம், ஆதித்யா பிர்லாவின்
ஐடியா நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனாலும் இரு நிறுவனங்களும்
தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளன.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய
அரசுக்கு கடிதம் எழுதிய இந்நிறுவனங்கள் கடன்சுமையை தளர்த்த மத்திய அரசு உதவ
வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. ஜியோ அதற்கு ஆட்சேபணை தெரிவித்து கடிதம்
அனுப்பியிருந்தது.
இந்த பிரச்சினை இன்னும் தீர்வாகாத சூழலில் நிறுவனத்தில்
புதிய முதலீடுகள் செலுத்துவது அவசியமாகி உள்ளது. ஆனால் ஆதித்யா பிர்லா புதிய
முதலீடுகளை செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடன் பிரச்சினையில் உள்ள
நிறுவனத்தை புதிய முதலீடுகள் இன்றி நடத்துவது சிரமம் ஆகியுள்ளது.
இதனால் வோடஃபோன் வெளி நபர் முதலீடுகளை எதிர்பார்க்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய வோடபோன் துணை நிறுவனர்
“புதிய முதலீடுகளும், அரசின் உதவியும் இல்லாமல் இந்தியாவில் வோடஃபோனால் இயங்க
முடியாது” என தெரிவித்துள்ளார்.
ஐடியாவும் தற்போது கைவிட்டு விடும் சூழலில் இருப்பதால் வேறு
ஐடியாக்களை செயல்படுத்தி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது வோடஃபோன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக