இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இணையத்தில் ஆபாச வீடியோ பார்ப்பவர்கள்
கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அதேபோல், இணையத்தில் வீடியோ பார்க்கும் போது முன்புற கேமராவின் மூலம் தங்களது
காட்சி வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது என்ற தகவலும் கசிந்த வண்ணம் இருக்கத் தான்
செய்கிறது.
வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்
மர்ம கும்பல் ஒன்று, ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் காட்சிகளை
வீடியோவாக பதிவு செய்து, அவர்களது மெயில் ஐ.டிக்கு தங்களின் அந்தரங்கக்காட்சி என்ற
தலைப்பில் அனுப்புகிறதாம். அதோடு இந்த வீடியோ தங்களது குடும்பத்தாருக்கோ அல்லது
இணையத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளது.
செயலி மூலம் வீடியோ காட்சி பதிவு
மேலும் இந்த விஷயமானது ஒரு செயலி மூலமாக நடக்கிறது என்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணாளிகளுக்கே தெரியாமல் இந்த செயலியை மொபைலில்
பதவிறக்கம் செய்ய வைத்து, இந்த செயலி மூலம் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் காட்சியை
வீடியோவாக பதிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமக்கே தெரியாமல் டவுன்லோடாகும் செயலிகள்...
இணையத்தில் ஒரு லிங்கை கிளிக் செய்யும் போது அது தானாக மற்ற
லிங்குகளுக்குள் செல்லும், அப்போது ஆட்டோமேட்டிக்காக ஒரு செயலி பதிவிறக்கம் செய்து
மொபைலுக்குள் இன்ஸ்டால் ஆகும். சிலர் அதை தேடி டெலிட் செய்து விடுவார்கள் சிலர்
அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஏனென்றால் அந்த செயலி எம்பி கணக்கில் கூட
இல்லாமல் கேபி கணக்கில்தான் இருக்கும்.
லிங்கை கிளிக் செய்தால் வீடியோ ஸ்டார்ட்
அதன்பின் இந்த செயலி மூலம் ஆபாச படத்துக்கான லிங்க்
நோட்டிபிகேஷனாக வந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அந்த லிங்க்கை கிளிக்
செய்து வீடியோ பார்க்கும் போது கேமராக தானாக ஓபனாகி, தங்களது காட்சிகள் வீடியோவாக
பதிவாக ஆரம்பித்துவிடுகிறது.
உறுதியான செயலியின் பெயர்
தற்போது கணினியில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிஎஸ்ஐ
எக்ஸ்போட் என்ற செயலி மூலம் வீடியோ காட்சி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த செயலி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கணினியில் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப் கேமரா மூலம் காட்சிகள் பதிவு
இந்த செயலி மூலம் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று வீடியோ
பார்க்கும் போது வெப் கேமரா மூலம், தங்களது காட்சிகள் அனைத்தையும் மர்ம கும்பல்
ஒன்று பதிவு செய்து விடுகிறது.
பணம் கேட்டு மிரட்டும் மர்ம கும்பல்
பின் அதே செயலி மூலம் தங்கள் கணினியில் பயன்படுத்தப்படும்
மெயில் ஐடிக்கு, தங்களது அந்தரங்க வீடியோ அல்லது இணையத்தில் வெளியாக இருக்கும்
வீடியோ என்ற தலைப்பில் இ-மெயில் அனுப்பப்படுகிறது. இந்த வீடியோ இணையத்திலோ அல்லது
குடும்பத்தாருக்கோ அனுப்பாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
செயலி மூலம் வைரஸ் பரவும் அபாயம்
அதேபோல் இதுபோன்ற செயலி மூலம் தங்களது எலக்ட்ரானிக்
சாதனங்கள் எண்ணில் அடங்கா வைரஸ் ஏற்றப்படுகிறது. அதேபோல் ஒருகட்டத்தில் தாமே மறந்த
குறிப்புகள் அனைத்தையும் செல்போனிலோ அல்லது கணினியிலோ பதிவு செய்து வைத்திருப்போம்
அது அனைத்தும் ஹேக் செய்து திருடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக