Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 நவம்பர், 2019

அக்கவுண்ட்களை அழிக்கப்போவதாக "ட்விட்டர்" அறிவிப்பு- எதற்கு தெரியுமா?

 Image result for ட்விட்டர்"



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

சமூகவலைதளங்களில் பிரதாமான ஒன்றாக கருதப்படுவது ட்விட்டர். பல்வேறு தகவல்களும், பிரபலங்களின் கருத்துகளும் ட்விட்டர் வாயிலாகவே நமக்கு கிடைக்கிறது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது அறிக்கைகளை டுவிட்டரில்தான் வெளியிடுகிறார்கள்.

சிறந்த பொழுதுபோக்குத்தளம்:

ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்துக் கொள்வது, அதில் தங்களுக்கு பிடித்த பிரபலங்களை ஃபாலோ செய்வது, தங்களது கருத்துகளை பதிவுசெய்து அதன்மூலம் ஃபாலோவர்களை பெறுவது என சிறந்த பொழுது போக்கு தளமாக உள்ளது.
டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் அழிக்கப்போவதாக அறிவிப்பு
இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத அக்கவுண்ட்களை நீக்கப்போவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் செயல்படாத அக்கவுண்ட்களை நிரந்தரமாக அழிக்க இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

நம்பகத்தன்மை வாய்ந்த வாடிக்கையாளரை வழங்க நடவடிக்கை

ட்விட்டர் தளத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. அதோடு, இறந்தவர்கள் பெயரில் இருக்கும் கணக்குகள் இந்த நடவடிக்கைகளில் அழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ்வேர்ட்களை மறந்திருப்போம்
மேலும் இதுபோன்ற நடவடிக்கை மூலம் பல்வேறு தரப்புகள் அக்கவுண்ட்கள் ஓபன் செய்துவிட்டு, யூஸர் நேம், பாஸ்வேர்ட்டுகளை மறந்திருப்போம். அந்த அக்கவுண்ட்கள் பயன்படாமல் இருக்கும். இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ட்விட்டர் தளத்தை பயன்படுத்த வைக்க முடியும். மீண்டும் அக்கவுண்ட்கள் புதுப்பித்து பயன்படுத்தலாம்.

ஆறுமாதங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தாதவர்கள்


இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் அறிவிக்கையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமாக ட்விட்டரை பயன்படுத்தாதவர்களது அக்கவுண்ட்கள் நிரந்தரமாக அளிக்கப்போவதாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகளை துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளோம்.

அனைவரையும் பயன்படுத்த வைக்க நடவடிக்கை

ஆறுமாதத்திற்கும் மேல் ட்விட்டர் பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களின் சொந்தக்காரர்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் ட்விட்டர் அக்கவுண்ட்கள் புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த வைக்கவும் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக