இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிறுவரில்
தொடங்கி பெரியவர் வரை சாக்லேட்டை விரும்பாதோர் இன்று எவருமே இருக்கமாட்டார்கள்.
அதற்கு காரணம் இதன் அளவற்ற சுவையும், கண்ணை கவரும் வடிவமுமே ஆகும். அதிக அளவில்
முதலீடு தேவைப்படாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல
வருமானத்தை தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இதற்கான தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு கொஞ்சம் வித்தியாசம் காட்டினால் போதும்
இந்த தொழிலில் நமக்கென ஒரு தனி இடத்தை சுலபமாக அடைந்து விட முடியும்.
தேவையான பொருட்கள் :
டிரிங்கிங்
சாக்லேட்
கோகோ
பவுடர்
மில்க்மெய்ட்
பால்பவுடர்
தயாரிக்கும் முறை :
பவுடராக உள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக
சல்லடையில் சலித்த பின், கலந்து கொள்ள வேண்டும். பிறகு மில்க்மெயிடை சேர்ந்து
கலக்க வேண்டும்.
மில்க்மெயிடுக்கு பதிலாக தண்ணீரும் சேர்க்கலாம்,
தண்ணீர் சேர்க்கும்பொழுது சிறிது சிறிதாக தெளித்து பிசைய வேண்டும், தண்ணீருக்கு
பதிலாக மில்க்மெயிட் சேர்த்தால் சுவைகூடும்.
இந்த கலவை கெட்டியாக இருக்கவேண்டும், சிறிது
தளர்வாக இருந்தால் பால்பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னர் இக்கலவையை நம் விருப்பத்திற்கு ஏற்ற
வடிவங்களில் ஊற்றி இதனை குளிரூட்டியில் வைக்க வேண்டும்.
சாக்லேட்
நன்றாக கெட்டியானதும் வெளியே எடுத்து காகிதங்களில் அடைத்தால் விற்பனைக்குத் தயார்.
விற்பனை செய்யும் முறை :
டிபார்ட்மெண்டல்
ஸ்டோர், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளின் மூலம் விற்பனை செய்யலாம். தரமும்,
சுவையும் அதிகரிக்க அதிகரிக்க ஆர்டர்கள் குவிந்து கொண்டே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக