இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு
நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா கம்பெனியின் பெயரில், புதிதாக ஸ்மார்ட் டிவிகளை
தயாரித்து விற்கப் போகிறார்களாம்.
தற்போது புதிதாக வெளி வர இருக்கும், இந்த
நோக்கியா டிவியை, நோக்கியா நிறுவன தயாரிக்கப் போவது இல்லை. வால்மார்ட்டின் துணை
நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் தான் நோக்கியா பிராண்டின் பெயரில்,
ஸ்மார்ட் டிவிக்களைத் தயாரித்து விற்க இருக்கிறது.
அதாவது நோக்கியா நிறுவனத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்தி
பிளிப்கார்ட் நிறுவனமே ஸ்மார்ட் டிவி தயாரித்து விற்க இருக்கிறது. நோக்கியா
பிராண்டின் பெயரில் டிவி வெளியாக இருப்பது உலக அளவில் இதுவே முதல் முறை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களின் எதிர்பார்ப்பை
புரிந்து கொண்டு புதிய ஸ்மார்ட் டிவிக்களை தயாரிக்கும் வேலை தொடங்கி இறுதியாக வாடிக்கையாளர்கள்
கையில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் ஃப்ளிப்கார்ட் நிறுவனமே செய்ய இருக்கிறது
என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. ஆனால் டிவியின் பிராண்ட் மட்டும் நோக்கியா
அவ்வளவு தான்
இதுவரை, புதிதாக நோக்கியா பிராண்டில் வெளியாக
இருக்கும் ஸ்மார்ட் டிவியை பற்றிய ஸ்பெசிஃபிகேஷன்கள் எதுவும் குறிப்பிடப்படப்
படவில்லை. அவ்வளவு ஏன் புதிதாக வெளிவர இருக்கும் நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்
டிவியின் விலை, என்று வெளியாக இருக்கும் தேதி போன்ற விவரங்கள் கூட வெளியாக வில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா பிராண்டில் வெளியாக இருக்கும்
ஸ்மார்ட் டிவியில் கவனிக்க வேண்டிய ஒரு சிறப்பு அம்சம் என்ன என்றால், அதன் ஆடியோ
சார்ந்த வேலைகளை ஜே பி எல் நிறுவனம் செய்யப் போகிறதாம்.
உலகம் முழுக்க, செல் போன்களை மட்டுமே தயாரித்து
விற்று கொண்டிருந்த பல நிறுவனங்கள் இன்று ஸ்மார்ட் டிவி களைத் தயாரித்து விற்றுக்
கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக சாம்சங், மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், சியாமி,
மோட்டோரோலா, ஒன் பிளஸ் என பல நிறுவனங்களை பட்டியல் போட்டுச் சொல்லலாம்.
கடந்த செப்டம்பர் 2019-ல் கூட மோட்டோரோலா
நிறுவனம் வார்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு
தன் ஸ்மார்ட் டிவிக்களை விற்றது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா நிறுவனத்தின்
ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் முதல் 65 இன்ச் வரை பல அளவுகளில் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. இதன் ஆரம்ப விலை சுமராக 14,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
ஸ்மார்ட்ஃபோன்களில் அதிகம் சந்தையைப் பிடிக்காத
நோக்கியா, இப்போது ஸ்மார்ட் டிவியில் களம் இறங்கி இருக்கிறது. நோக்கியாவின்
ஸ்மார்ட் டிவிக்கு என்ன வரவேற்ப்பு இருக்கிறது எனப் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக