இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு
மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்த செயலியைப்
பயன்படுத்துகின்றனர். அன்மையில் இந்த செயலியில் பல்வேறு பிரச்சனைகள் வந்த வண்ணம்
உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்கள்
இந்நிலையில் வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்கள்
குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
121 இந்தியர்கள்
குறிப்பாக 121 இந்தியர்கள் உள்பட உலகம்
முழுவதும் சுமார் 1400 பேரின் வாட்ஸ்ஆப் கணக்குகள் ஹேக் செய்ப்பட்டதாக புகார்
எழுந்தது. அதிர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று
பிகாசஸ் என்ற SPY WARE மூலம் வாட்ஸ்ஆப் கணக்குகளை வேவு பார்த்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உறிப்பினர் திக்விஜய் சிங் கேள்வி
எழுப்பினார்
அரசு நடவடிக்கை
கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கள்
பிரசாத்,வாட்ஸ்ஆப்-ன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய அரசு நடவடிக்கை
எடுத்து வருவதாகக் கூறினார்.
தொழில்நுட்பத்துறை அமைச்சகம்
மேலும் இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு
அவர்கள் பதில் அளித்திருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத்; தெரிவித்தார். பின்பு
கூடுதல் விவரங்களைத் தரும்படி வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு
உள்ளதாக கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
தகவல் பாதுகாப்பு சட்டமுன்வடிவை மத்திய அரசு
விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சைபர் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக