இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை
போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் பெண்கள் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த
விடுதியில் உள்ள குளியலறை அருகே அங்கு வேலைபார்க்கும் ஒருவர் நீண்ட நேரம்
நின்றுகொண்டிருந்தார். அதை அங்குள்ள பெண்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்கள், அந்த நபரைக் கவனித்தனர்.
அப்போது
அவரின் கையில் செல்போன் இருந்தது. அதன்மூலம் குளியலறை உள்ளே குளிக்கும் பெண்களை
அந்த நபர் வீடியோ எடுத்திருப்பது தெரிந்தது. இதனால், அந்த நபர் குறித்த தகவலை
விடுதி நிர்வாகத்திடம் பெண்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து
அந்த நபர் குறித்து விசாரித்தபோது அவர் விடுதியில் வேலைபார்க்கும் சமையல் மாஸ்டர்
வெங்கடபிரசாத் (22) என்று தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின்
முரணான தகவலைத் தெரிவித்தார். இதனால் மாஸ்டர் வெங்கடபிரசாத் மீது கண்ணகி நகர்
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர்
வீரகுமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் சமையல் மாஸ்டர் வெங்கட பிரசாத்,
விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தது உண்மை எனத்
தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெங்கடபிரசாத், இந்த விடுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு
முன்புதான்
வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.
இந்தச்
சம்பவம் அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக