இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரஃபேல்
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது. மறுசீராய்வு மனு இன்று காலை 11.00 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. மூன்று பேர் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
தலைமையிலான பெஞ்ச், வழக்கை தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது, மனுதாரர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரி
அருண் சவுத்ரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா உட்பட
இன்னும் பலர் ரஃபேல் ஒப்பந்த வழக்கில் எஸ்ஐடி விசாரணை கோரினர். அதே நேரத்தில்,
ரஃபேல் நாட்டின் தேவை என்று மத்திய அரசு கூறியதுடன், மனுவை தள்ளுபடி செய்ய
வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
Supreme Court dismisses Rafale review petitions against
its December 14, 2018 judgement upholding the 36 Rafale jets' deal. pic.twitter.com/DCcgp4yFiH
—
ANI (@ANI) November 14, 2019
இதற்கு நடந்தது என்ன.....?
கடந்த
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர்
விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை
வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல்
ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர்
குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ்
காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதுதொடர்பான
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி
செய்து உத்தரவிட்டது. ஆயினும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி
மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த விவரங்கள் திரிக்கப்பட்டு நீதிமன்றத்தில்
கூறப்பட்டதாகவும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் பூஷண்
தெரிவித்திருந்தார்.
கடந்த
ஏப்ரல் மாதம் ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என
உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக்
கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்தது. அதுமட்டுமில்லாமல், மனுதாரர்
சார்பில், முன்வைக்கப்படும் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கவும் நீதிபதிகள் சம்மதம்
தெரிவித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.
மேலும்
இந்த ரபேல் விவகாரம் குறித்து பேசிய முன்னால் காங்கிரெஸ் தலைவர் ராகுல் காந்தி,
பிரதம மந்திரி நரேந்திர மோடி போர்க்கால விமான கொள்முதல் ஒப்பந்தத்தை மாற்றியன்
காரணமாக தான் விலை அதிகரித்தது. "பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆவணப்படி,
நரேந்திர மோடி அசல் ஒப்பந்தத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஒரு ரபேல் விமானத்தை 1600
கோடி ரூபாய்க்கு வாங்கினார் என்று கூறுகிறது எனவும் ராகுல் குற்றம் சாட்டினர்.
மேலும்
அவர், அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் பாதுகாப்பு விமானங்கள் உற்பத்தி
தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றதில்லை. அவரது வியாபாரம் தோல்வி அடைந்தது,
அவரிடம் பணம் இல்லை. ஆனாலும் அவர் இன்று நாட்டின் "மிகப்பெரிய"
பாதுகாப்பு ஒப்பந்தத்தை பெறுகிறார் எனவும் கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக