இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆந்திரபிரதேச மாநிலம் திருப்பதி அருகே உள்ள தாலூறு கிராமத்தை சேர்ந்தவர் சேக் பாஷா. இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவி பாத்திமா டிக்-டாக்கில் கணக்கை துவங்கி, நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த விஷயம் அவரது கணவருக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார்.
இருப்பினும்,
லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற மோகத்திற்காக, கணவருக்கு தெரியாமல் வீடியோக்களை பதிவிட்டு
வந்துள்ளார் பாத்திமா. மேலும், இவருக்கு டிக்-டாக்கில் நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம்
ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு
சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் பாத்திமா தனது பெண் தோழியுடன் சேர்ந்து, நடுரோட்டில்
நின்று டிக்-டாக் செய்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த சேக் பாஷா, தனது மனைவியை உருட்டுக்
கட்டையால் தாக்கி கொலை செய்தார்.
இந்த
விஷயம், வெளியில் தெரிந்தால் குடும்ப கவுரவம் பாழாகி விடும் என்று எண்ணிய அவர், தனது
மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்று நாடகமாடியுள்ளார். இதையடுத்து
போலீசார் நடத்திய விசாரணையில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு
செய்த காவல்துறையினர், சேக் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆத்திரத்தில்
எடுக்கும் முடிவு விபரீதங்களை தரும் என்பதற்கு, இந்த சம்பவம் சான்றாக இருந்தாளும்,
தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருந்த சேக் பாஷாவும், இந்த டிக்-டாக் மோகத்தால்
பலிகாடாக மாறியுள்ளது சிந்திக்க வேண்டியது. டிக்-டாக்கால் பல குடும்பங்கள் பாழாகி வருவது
தமிழகத்தில் தொடர்கதையாக மாறிக்கொண்டு வருவது வேதனை தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக