• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 நவம்பர், 2019

ஃப்ளிப்கார்ட், அமேசான்... இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்?

ஊர்க்கோடாங்கி திங்கள், நவம்பர் 11, 2019

Image result for ஃப்ளிப்கார்ட், அமேசான்... இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்?




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை ‘இன்டர்நெட் புரட்சி’ என்றுதான் சொல்ல வேண்டும். ஜியோ வருகைக்குப் பிறகு ‘டேட்டா ப்ளஸ்’ நாடாக இந்தியா இன்று மாறியிருக்கிறது. இப்போது கடைக்கோடி இந்தியனுக்கும், `போதும்... போதும்’ என்கிற அளவுக்கு அதிகமான டேட்டா கிடைக்கிறது. இதனால் டிஜிட்டல் சார்ந்த புதிய தொழில்கள் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கின்றன. இது சார்ந்த வாய்ப்புகள் தொடர்ந்து உருவாகிவருகின்றன.

இந்த டிஜிட்டல் மாற்றத்தில் பெரும் வளர்ச்சி கண்டுவரும் துறைகளில் ஒன்று இ-காமர்ஸ். இதில் ஃப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருள்களை விற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் இந்த நிறுவனங்களின் `சிறப்புத் தள்ளுபடி விற்பனை’ எப்படி களைகட்டியது என்பதை அனைவரும் பார்த்திருப்போம். இரண்டு மூன்று நாள்களிலேயே கோடிக்கணக்கான பொருள்களை இந்தியா முழுக்க விற்றுத் தீர்த்தன இந்த நிறுவனங்கள்.
ஆனால், `இவை நஷ்டத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன’ என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. அதுதான் உண்மை. அண்மையில் ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸிடம் (Registrar of Companies - ROC) தாக்கல் செய்யப்பட்ட கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனங்களின் வருவாய், நஷ்டம் உள்ளிட்ட கணக்கு விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
அவற்றின் மூலம் அமேசான், ஃப்ளிப்கார்ட் இரு நிறுவனங்களுமே பெரும் நஷ்டங்களையே சந்தித்துள்ளன என்பது தெரியவந்திருக்கிறது.
ஃப்ளிப்கார்ட் நிலவரம் என்ன?
இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் எட்டுத் தொழில்களை நடத்திவருகிறது. ஃப்ளிப்கார்ட் இந்தியா, ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் சர்வீசஸ், ஃப்ளிப்கார்ட் டிஜிட்டல், ஃபார்மர்மார்ட் ஆகிய நிறுவனங்கள் இவற்றில் அடங்கும். ஃப்ளிப்கார்ட் இந்தியா, ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட் என்ற இரண்டு முக்கியப் பிரிவுகள்தான் தற்போது ஃப்ளிப்கார்ட்டின் ஆன்லைன் வர்த்தகம் மொத்தத்தையும் நடத்திவருகின்றன. அந்தப் பிரிவுகளின் இழப்பு கடந்த நிதியாண்டில் சுமார் 69% உயர்ந்து, ரூ.5,459 கோடியாக அதிகரித்திருக்கிறது.
 வணிகம்

அதற்காக இந்த நிறுவனங்களின் வருவாய் குறைந்துவிட்டது என நினைக்க வேண்டாம், ஃப்ளிப்கார்ட் இந்தியா மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.30,931 கோடி வருவாயைப் பதிவுசெய்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 43% அதிகம். இதே நிதியாண்டில் அதன் இழப்பு 86% அதிகரித்து, ரூ.3,835 கோடியாக உள்ளது. மற்றொரு பிரிவான ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட்டின் (இந்தியப் பிரிவு) இழப்புகள், மார்ச் 31, 2019 தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 40% அதிகரித்திருக்கின்றன. மொத்தமாக ரூ.1,624 கோடி இழப்பைச் சந்தித்திருக்கிறது இந்தப் பிரிவு. இதன் வருவாய் 33% அதிகரித்து, ரூ.4,234 கோடியாக இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட்டின் வருவாய் பெரும்பாலும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பொருள் சேமிப்பிலிருந்து வருகிறது.
அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் நஷ்டத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, அவை இன்னும் முதலீடு செய்யும் படலத்தில்தான் இருக்கின்றன.
அமேசான் நிலவரம் என்ன?
அமேசான் செல்லர் சர்வீசஸ் - இதுதான் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தைப் பார்த்துக்கொள்ளும் அமேசானின் முக்கிய நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் முன்பைவிட நஷ்டத்தைக் குறைத்திருந்தாலும் அதிகமான நஷ்டத்தையே இந்த வருடமும் சந்தித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.5,685 கோடி. இது, இதற்கு முந்தைய ஆண்டைவிட 9.5% குறைவு.
இத்துடன் அமேசானுக்கு சொந்தமான மற்ற சிறிய நிறுவனங்களின் நஷ்டங்கள் அனைத்தையும் சேர்த்தால், அமேசான் நிறுவனத்துக்கு 2018-19-ம் நிதியாண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.7,000 கோடி நஷ்டம். எப்படி நஷ்டம் சற்றே குறைந்திருக்கிறதோ, அதேபோல வருவாயும் கடந்த நிதியாண்டில் குறையவே செய்திருக்கிறது. 2017-18-ம் நிதி ஆண்டைவிட 2018-19-ம் நிதியாண்டில் வருவாய் 8% குறைந்து, ரூ.11,250 கோடியில் இருக்கிறது.
டிஜிட்டல் பேமன்ட் சேவைகளுக்கும் நஷ்டம்!
கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு அடுத்து நல்ல வளர்ச்சியைக் கண்டிருப்பது டிஜிட்டல் பேமன்ட் சேவைகள். இவையும் கடந்த நிதியாண்டில் கணிசமான நஷ்டத்தையே சந்தித்திருக்கின்றன.
ரூ.334 கோடியாக இருந்த ‘அமேசான் பே’-யின் நஷ்டம், கடந்த நிதியாண்டில் ரூ.1,160 கோடியாக உயர்ந்துள்ளது. கூகுள் பே தவிர்த்து, பேடிஎம் போன்ற மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்தித்திருக்கின்றன. ஃப்ளிப்கார்ட்டுக்கு சொந்தமான போன்பே நிறுவனம் 140% நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் அதன் இழப்பு ரூ.1,905 கோடி.
இதற்கு காரணம் என்ன?
கடந்த நிதியாண்டில்தான் புதிய இ-காமர்ஸ் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் மொத்த பிசினஸ் மாடலையுமே மாற்றியமைக்க வேண்டிய தேவை இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டன. கடந்த நிதியாண்டில் பிப்ரவரி, மார்ச் இரண்டு மாதங்களில் இதன் தாக்கத்தை உணர்ந்திருக்கின்றன இந்த நிறுவனங்கள்.
எல்லாவற்றையும்விட, ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிர்வாகம் தொடர்பான செலவுகள் அதிகரித்துகொண்டே இருக்கின்றன. ஃப்ளிப்கார்ட்டுக்கு இந்தச் செலவுகள் 91% உயர்ந்து, ரூ.1,889 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், `இசாப்’ (ESOP) என்று சொல்லப்படும் எம்ப்ளாயி ஸ்டாக் ஆப்ஷன்தான்.
அமேசான், ஃப்ளிப்கார்ட்டு டனான போட்டியைச் சமாளிப்பதற்காகவே அதிக செலவுகளைச் செய்திருக்கிறது. வால்மார்ட் கைகளுக்கு ஃபிளிப்கார்ட் சென்ற பிறகு கடும்போட்டியை அமேசான் தந்துவந்தது. வேகமான டெலிவரி தொடங்கி பல விஷயங்களுக்கு கூடுதல் செலவுகள் செய்துவருகிறது அமேசான்.
நஷ்டமா, நோ பிராப்ளம்!
ஆனால், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் நஷ்டத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, அவை இன்னும் முதலீடு செய்யும் படலத்தில்தான் இருக்கின்றன. ஒரு நிறுவனம், அதிலும் ஒரு டிஜிட்டல் நிறுவனம் ஆரம்பகட்டத்தில் நஷ்டத்தை சந்திக்கவே செய்யும்.
வணிகம் 

அதிக அளவில் வாடிக்கை யாளர்களை ஈர்ப்பதற்காக மார்க்கெட்டிங்கில் அதிக செலவுகளை இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
அது மட்டுமல்லாமல் ஆன்லைன் வர்த்தகத்துக்குச் சேமிப்புக் கிடங்குகள், டெலிவரி மையங்கள் என முக்கியமான கட்டமைப்புகள் சிலவற்றை நிறுவ வேண்டியது அவசியம். இது தொடர்ந்து நல்லமுறையில் தொழில்செய்ய உதவும். இந்தச் செலவுகளுக்கான பலன்களை அடுத்தடுத்த வருடங்களில்தான் பார்க்க முடியும் என்பதை இந்த நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் அடைந்த நஷ்டம் நமக்குப் பெரிதாகத் தெரிந்தாலும், இவை உண்மையில் நல்ல வளர்ச்சியையே கண்டுவருகின்றன. வருவாய்க்கும் நஷ்டத்துக்குமான இடைவெளி குறைந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட்டை எடுத்துக்கொண்டால், 2015-16-ம் நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.1,951 கோடி; நஷ்டம் ரூ.2,305 கோடி. 2016-17-ம் நிதியாண்டில் வருவாய் ரூ.2,790 கோடி; நஷ்டம் ரூ.1,160 கோடி. கடந்த நிதியாண்டில் வருவாய் ரூ.4,234 கோடி; நஷ்டம் ரூ.1,625 கோடி என அதிகரித்திருக்கிறது.
இதிலிருந்து நஷ்டத்தைவிட வருவாய் என்பது நல்ல வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதைக் காணலாம்.இதனால்தான் இந்தியா போன்ற பெரிய சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றன அமேசான் போன்ற நிறுவனங்கள்.
வரும் ஆண்டுகளில் ரூ.35,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அமேசானின் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ் அறிவித்ததி லிருந்தே ஆன்லைன் நிறுவனங் கள் எவ்வளவு தெம்பாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்!

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • Amazon Pay பயோமெட்ரிக் UPI பரிவர்த்தனை – டிஜிட்டல் கட்டணங்களில் புதிய அனுபவம்
    Amazon Pay பயோமெட்ரிக் UPI பரிவர்த்தனை – டிஜிட்டல் கட்டணங்களில் புதிய அனுபவம்
    இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், Amazon Pay தனது UPI சேவையில் பயோமெட்ரிக் அடிப்பட...
  • சூரசம்ஹாரம் - பகுதி 03...!!
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து...
  •  உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
    உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
    கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் காட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள பபூன் வகை குரங்கு தனது உரிமையாளரின் மொபை...
  • Amazon சொந்தமாக 50-இன்ச், 55-இன்ச் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது: விலை, அம்சங்கள்!
      அமேசான் நிறுவனம் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் தனது முதல் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அற...
  • நெற்றியில் பட்டை போடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
    கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ...
  • மகா சிவராத்திரி விரதம்!
  • எறும்பீஸ்வரர் கோவில் - திருவெறும்பூர்
      இறைவர் திருப்பெயர் : எறும்பீஸ்வரர், மதுவனேசுவரர், மாணிக்க நாதர் மணிகூடாசலதேஸ்வரர் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலைமேல்,மகாதேவர், இறைவி...
  • பாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன?
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து ...
  • தசரதன் மிதிலைக்கு வருதல்
      வி ல் உடைந்த சத்தம் அண்டம் முழுவதும் கேட்ட போதிலும் சீதைக்கு கேட்கவில்லை. ஏனென்றால் சீதை இராமரை நினைத்து மனமுருகி கொண்டிருந்தாள். அப்பொழு...
  • பாலூட்டும் தாய்மார்கள் மறந்தும் இவற்றை சாப்பிடக் கூடாது
    பாலூட்டும் தாய்மார்கள் மறந்தும் இவற்றை சாப்பிடக் கூடாது
    புதிதாக பிறந்த குழந்தை தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருப்பதால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் (Breastfeeeding Mothers) தங்களது உ...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி