இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காஞ்சிபுரம்
வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் ஐயங்காரில் வடகலை, தென்கலை பிரிவைச்
சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
வடகலை,
தென்கலை பிரிவினர் மோதல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்
ஐயங்காரில் வைஷ்ணவத்தைச் சேர்ந்த வடகலை, தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவதில்
இன்று பிரச்சனை ஏற்பட்டது.
வடகலை,
தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம்
இன்று பூதத்தாழ்வார் பிறந்த
நட்சத்திரம் என்பதால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சாத்துமுறை சிறப்பு
உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் முதலில் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர்.
கைகலப்பில்
ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்
அப்போது அதற்கு நீதிமன்ற தடை
உள்ளதால், பாடக்கூடாது என்று வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில்
வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தள்ளிக்
கொண்டனர். இதனால் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது.
சமாதானம்
செய்த காவல்துறையினர்
தகவல் அறிந்த காவல்துறையினர்,
தாசில்தார், கோவில் செயல் அலுவலர்
ஆகியோர் விரைந்து சென்று அவர்களை
சமாதானப்படுத்தினர்.
சன்னதிக்குள் இரு பிரிவினரும் சுமார்
2 மணி நேரத்திற்கும் மேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போட்டி போட்டுக் கொண்டு
பாடியுள்ளனர். இதேபோன்று ஒவ்வொரு முறையும் நடப்பதாக பக்தர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
Twitter-Kanchipuram:
Clash broke out between members of two Vaishnavite
sects...
Kanchipuram:
Clash broke out between members of two Vaishnavite sects — Thenkalais and
Vadakalais over chanting of… https://t.co/n3aIpSitdx
— ANI (@ANI) 1573027738000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக