இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கஃபே
காபி டே, நிறுவனத்தின் குறிப்பிட்டத்தக்க அளவுக்கான பங்குகளை வாங்குவதில், ஓயோ
(Oyo) மற்றும் பிரிட்டீஷ் நிறுவனமான அபாக்ஸ் (Apax), இடையே கடும் போட்டி
நிலவுகிறது.
காபி
டே என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன், மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களுமே, வெளியில்
தெரிவிக்காத ஒப்பந்தம் (NDA) செய்து கொண்டுள்ளதாகவும், நிறுவனத்தை வாங்க
பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே,
கேகேஆர், பாயின் மற்றும் டிபிஜி கேபிடல் ஆகிய நிறுவனங்கள், கஃபே காபி டே
நிறுவனத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. அவையும், இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை
ஏற்படுத்தியுள்ளன.
ஓயோ நிறுவனம்
ஓயோ
நிறுவனம், ஹோட்டல் அறை புக்கிங் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. எனவே காபி டே
நிறுவனத்தை வாங்கும்போது, தனது தொழிலுடன் அது இணைந்து செல்லும், வசதியாக இருக்கும்
என நினைக்கிறது. காபி டே நிறுவனத்தை வாங்க முயற்சிக்கும் அது சார்ந்த தொழிலில்
உள்ள ஒரே நிறுவனம் இதுதான்.
1600 கிளைகள்
இதுகுறித்து
அந்த நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், காபி டே நிறுவனத்திற்கு 1600 கிளைகள்
உள்ளன.அதில் பெரிய நகரங்களில் உள்ள அதிக வர்த்தகம் நடைபெறும் பிராஞ்ச்கள் ஒரே
மாதிரி பெயரில் இருக்கும். அதேநேரம், சிறு நகரங்களில், உள்ள காபி டே
நிறுவனங்ககளுக்கு வேறு பெயர் சூட்டப்படும். காபிடே லைட் என்பது போல அதற்கு
பெயரிடப்பட வாய்ப்பு உள்ளது.
பல வகை கிளைகள்
தற்போது
காபிடே நிறுவன அவுட்லெட்டுகள் பலவும், சொந்த நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன, சில
இடங்களை வாடகை முறையில் கொடுத்துள்ளது. சில கிளைகள், பிரான்சைஸ் மாடலில்
நடக்கிறது. இவை அனைத்தையும் எப்படி வாங்குவது என்பது குறித்து, பேச்சுவார்த்தை
நடந்து வருகிறது என்கிறது தகவல்கள்.
சித்தார்த்தா
க.ஃபே
கா.ஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மங்களூர் அருகேயுள்ள நேத்ராவதி நதியிலிருந்து
கடந்த ஜூலை மாதம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை
ஏற்படுத்தியது. அவர் திடீரென மாயமான 36 மணி நேரத்திற்கு பிறகு, நதியிலிருந்து,
சடலமாக மீட்கப்பட்டது. அவரது மரணம் தொடர்பாக பல்வேறு மர்மம் நிலவுகிறது. கடன்
தொல்லையால் என்றும், வருமான வரி சோதனைகளால் என்றும் பல கருத்துக்கள் உலவின. இந்த
நிலையில், காபி டே விற்பனைக்கு முயற்சி நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக