Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 நவம்பர், 2019

கடவுள்களும் ESP யும் – ஹனுமார் (ESP 03)



 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

போனபதிவில்…
அந்தரத்தில் பறந்த மனிதர் பற்றியும்… பாரிய நிறையை நகர்த்திக்காட்டியதுடன் மட்டுமல்லாது தனது நிறையை கூட்டிக்காட்டிய மனிதர் பற்றியும் பார்த்திருந்தோம். அப்போது.. முடிவில் கூறியிருந்தேன்… இப்படி நிகழ்த்தப்படுவது இதுவல்ல முதல் முறை என்று…
அப்படியானால்… முன்னர் யார் இப்படியான பெளதீக மீறல்களை செய்தார்கள் என்பதை இன்று எழுதுகிறேன். ( இவை எனது ஊகங்கள் தான் ESP யாக இருக்கும் என்று… பிழைகளைச்சுட்டிக்காட்டவும்.. :) )
——————————————————————————————
இராமாயணம் பலருக்குத்தெரிந்திருக்கும் ( தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்..)..

அதில் குறிப்பிடப்படும் ஒரு கதாப்பாத்திரம் “ஹனுமார்”…
ஹனுமார்… பறக்கக்கூடிய சக்தி கொண்டவாரகவே காட்டப்படுகின்றார்… எனினும் அவர் அந்த சக்தியை முன்னர் உணர்ந்திருக்கவில்லை… ஒருமுறை குறிப்பிட்ட ஒருவரால் ( பெயர் மறந்துவிட்டது ) அந்த சக்தி இருப்பது உணர்த்தப்படுகிறது. அதன் பின்னரே அவர்… இலங்காபுரிக்கு பறந்து செல்வதாக காட்டப்படுகிறது.
இன்னொரு சம்பவத்தில்… இராமரின் தம்பி லக்ஷ்மனனைக்காப்பாற்ற “சஞ்சீவி” மலையில் போய் குறிப்பிட்ட ஒரு மூலிகையை கொண்டுவருமாறு ஹனுமார் பணிக்கப்படுகிறார். உடனே பறந்து சென்ற ஹனுமார்… அங்கு அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியாமையால்… அந்த மலையை அப்படியே தூக்கிவருவதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த கதாப்பாத்திரத்தில் குறிப்பிடப்படும்… ஹனுமார், உண்மையிலேயே ஒரு ESP சக்தி கொண்ட மனிதராக அல்லது தனது மூளையிம் பல செல்களை பயண்படுத்தி அபூர்வ ஆற்றல்களை வெளிப்படுத்தத்தக்க மனிதராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ( எல்லாத்தையும் புணைவுகளுடன் மிகைப்படுத்தி எழுதியமையால் வரலாறுகள் கூட பொய்யாகிப்போவதுண்டு. )
இங்கு நாம் இன்னொன்றையும் கவணிக்க கூடியதாக இருக்கிறது… என்னதான் மலையை தூக்கிகொண்டு பறக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தாலும்… அவரால், அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியவில்லை.
நவீன உலகத்தில் இனங்காண‌ப்பட்ட ESP மனிதர்களும் அப்படித்தான்… குறிப்பிட்ட ஒரு ஆற்றலையே அவர்களால் திறம்பட வெளிப்படுத்த முடிகிறது. (மூளையின் குறிப்பிட்ட பகுதி செல்களின் ஆற்றலை மட்டுமே இவர்களால் தூண்ட முடிகிறது.)
இராமயாண உதாரணத்தை மட்டும் அவைத்துக்கொணு இந்த ESP மனிதர்கள் முன்னர் இருந்தார்கள் என்பதை சிலருக்கு ஏற்க முடியாதிருக்கும்.
எனினும்… எகிப்திய கதைகளில் வரும் தெய்வங்கள், தேவதைகளும் பறக்கும் ஆற்றலைப்பெற்றிருந்ததாக காட்டப்படுகிறது. ( இறக்கை இருந்ததாக சொல்லப்படுவது பின்னர், சாதாரண மனிதர்கள் நம்புவதற்காகவும் லொஜிக்கிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட‌ புணைவுகளாகவும் இருக்கலாம். )
எகிப்திய தெய்வங்களில்… ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பது போன்று காட்டப்படிருக்கிறது. அனைத்தும் கொண்டவர் இல்லை என்பதை இதிலிருந்தும் ஊகிக்கலாம்…
இவை இன்று அறியப்பட்டுள்ள ESP சக்திகளுடன் திறம்பட ஒத்துப்போகின்றது.
——————————————————————————————
இங்கு நான் இப்போது சொன்ன விடையங்களுக்கு… பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கும்… அவற்றை கொமென்ட்ஸில் சொல்லவும்…
——————————————————————————————
அடுத்த பதிவுகளில்…
முன்கூட்டிய நிகழ்வுகளை சொல்லும் ESP பற்றியும்… அவற்றை ஏற்கனவே கூறிய வரலாற்று அல்லது இதிகாச சம்பவங்கள் பற்றியும்…
உயிரில்லாமல் தமது ESP சகிதியை வெளிப்படுத்திய சடலங்கள் பற்றியும்… அது எப்படி சாத்தியமானது என்பதியும் பார்ப்போம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக