Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 10 டிசம்பர், 2019

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி

 
 நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நாடாக திகழும் நைஜீரியாவில் சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மோசமான சாலைகள், அதிக பாரம் ஏற்றுதல் போன்ற காரணங்களால் அங்கு பல்வேறு விபத்துக்கள் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் நிகர் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியில் 103 பேர் பயணித்தனர்.

சாமில் என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 12 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 91 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார், கண்டெய்னர் லாரி வேகமாக சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக