சீன
தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi , Redmi K30 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சில
தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த
வெளியீட்டில் நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் Redmi XiaoAI ஸ்பீக்கர்
பிளேவையும் அறிமுகம் செய்துள்ளது. இது தவிர, புதிய Wi-Fi திசைவி, Redmi Router
AC2100 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரில்
குரல் அங்கீகார அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரில் 5W ஸ்பீக்கர்
பொருத்தப்பட்டுள்ளது மற்றும் பயனரின் கட்டளைகளைக் கேட்டு செயல்படும் ஒரு மெய்நிகர்
உதவியாளர் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Redmi
XiaoAI ஆனது ஸ்பீக்கர் ப்ளே Amazon Echo மற்றும் Google Home வகைகளிலும் உள்ளது.
இந்த ஸ்பீக்கரில் புள்ளியிடப்பட்ட கண்ணி வடிவமைப்பு மேலே 5 LED
கொண்டுள்ளளது.
தங்கள்
தயாரிப்பு குறித்து நிறுவனம் தெரிவிக்கையில்., Xiaomi-யை
சேர்ந்த 3-வது தலைமுறை XiaoAI விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் பயனர்களுக்கு
அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் 1,400 திறன்கள்
வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Redmi,
Smart Home பயன்பாடுகளை XiaoAI Speaker Play-வுடன் இணைக்க முடியும். மேலும்,
நிறுவனம் சுயமாக உருவாக்கிய குரல் அச்சிடும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது,
காலப்போக்கில் குரல் அங்கீகாரத்தை நிறுவனம் மேலும் மேம்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த
ஸ்பீகருக்கும் சீனாவில் முன்பதிவு விற்பனை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதன் விலை
79 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 800 ரூபாய்). இதன் விற்பனை சீனாவில் டிசம்பர்
12 முதல் தொடங்கவுள்ள நிலையில்., நீல, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய
நான்கு வண்ண வகைகளில் பயனர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றபோதிலும் இந்தியாவில் இந்த ஸ்பீகர் எப்போது விற்பனைக்கு வரும் என தகவல்கள்
இல்லை.
இந்த
தயாரிப்புடன் Redmi Router AC2100-னையும் Xiaomi
அறிமுகப்படுத்தியுள்ளது. இரட்டை பேண்ட் (2.4GHz + 5GHz) இதில்
துணைபுரிகிறது, எனவே ஒரே நேரத்தில் 128 சாதனங்களை இந்த Router உடன் இணைக்க
முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இணைப்பின் வேகம் பற்றி பேசுகையில், இது 2
Gbps வரை பயனர்களுக்கு இணைய வேகம் அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக