Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 டிசம்பர், 2019

இறந்த போன நபர்போல் ஆள்மாறாட்டம்..! ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் திருட்டு..!

இறந்த போன நபர்போல் ஆள்மாறாட்டம்..! ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் திருட்டு..!



சென்னையை சேர்ந்த பெருமாள் கடந்த 2009-ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு சொந்தமாக 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் இருக்கிறது. இந்நிலையில் வேறொரு நபரை இவர் தான் பெருமாள் என ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2013-ல் அவரிடம் இருந்த அந்த நிலத்தை வாங்கியது போல ரகுக்குமார் என்பவர் போலி ஆவணங்களை தயார்ப்படுத்தி அபகரித்துள்ளார்.
பின்னர் அந்த இடத்தை ரகுக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி பெயரில் பத்திர பதிவு செய்தது அறியப்பட்டது. அதன் பின் நிலத்திற்கு சொந்தகாரரான பெருமாளின் மகன் கோபி என்பவர் போலீசிடம் புகார் கொடுத்தார். அதனை மத்திய குற்றப்பிரிவில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த மோசடியில் ரவிக்குமாரும் அவரது மனைவி ஜெயக்குமாரி மற்றும் உடந்தையாக செயல்பட்ட போத்திராஜ் ஆகியோரை போலீசார் கைது சேந்தனர். பின்னர் அந்த அபகரிப்பில் மற்றொரு நபரான சரவணன் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக