2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சி எம்பி விஷாம்பர் பிரசாத்
நிஷாத் கேள்வி எழுப்பி இருந்தார்.
2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தியதில் இருந்து நாட்டில்
கருப்பு பணம் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஆயிரம் ரூபாய் நோட்டு மீண்டும் அமலுக்கு வருகிறது, 2,000
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுகிறது என்று தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது.
அரசின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் அனுராக் தாக்கூர்
கூறியிருப்பதாவது: பணமதிப்பிழப்பு என்பது கருப்பு பணம் ஒழிப்புக்காக கொண்டு
வரப்பட்டது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாபஸ் பெறும் திட்டம் மத்திய
அரசிடம் இல்லை. எனவே, இது பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெளிவுப்படுத்தினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக