காமாட்சி
அம்மன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து உணவு உட்கொள்ளும் குழந்தைகளை மீட்க வேண்டி
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலின் வாசலில் அலங்கோலமாக
இரண்டு பள்ளி மாணவர்கள் தாய் தந்தை கவனிப்பின்றி பக்தர்களிடையே பிச்சை எடுத்து
வருகிறார்கள் .
இந்த
மாணவர்களின் தாய் குடிபோதைக்கு அடிமையான காரணத்தினால் தன் மகன்களை முறையாக
பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். எப்பொழுதும் குடித்து கொண்டே இருக்கும்
அந்த தாய் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் ஒருவருடன் தற்போது சேர்ந்து வசித்து
வருகிறார்
அந்த
இரண்டு மாணவர்களும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தாயின் கரம்பிடித்து
தற்போது எப்படி வாழ்வது என செய்வதறியாமல் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும்
பக்தர்கள் இடையே விருப்பமின்றி கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்கள்.
தற்சமயம்
காமாட்சி அம்மன் கோயில் வாயிலில் ஒரு பழுதடைந்த ஆட்டோவில் சுமார் மூன்று வருடமாக
தங்கியிருக்கிறார்கள். மதிய நேரத்தில் கோயிலின் பிளாட்பாரத்தில் தங்குகிறார்கள்.
இந்த இரண்டு மாணவர்களையும் மீட்டு உரிய கல்வி வழங்கினால் மாணவர்களின் எதிர்காலம்
சிறப்பாக அமையுமென இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக