Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 டிசம்பர், 2019

27 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும்


27 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும்: TN Govt

 
மிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் (Local Body Elections) வரும் 27 ஆதேதி மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதேவேலையில் அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா (Pongal) கொண்டாடப்பட உள்ளது.
தமிழக அரசு (TN Govt) சார்பில் ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். நாளை முதல் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மறுபுறம் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு (Pongal Prize) விநியோகச் செய்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் (Local Body Elections) நடைபெற மாவட்டங்களில், தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேவேலையில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் நாளை முதல் பணம் மற்றும் பொங்கல் பரிசு (Pongal Prize) வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
நவம்பர் 29 அன்று சென்னையில் பொங்கல் பரிசு பேக்கேஜிங் நடைபெற்றது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அரிசி பெறும் 2.05 கோடி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000. நியாய விலைக்கடைகளில் இலவச பொங்கல் பரிசு மூட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 
ஆனால் தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்தநிலையில், மதுரை மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். 
அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது 27 பகுதிகளில் பொங்கல் பரிசு அனுமதிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் நீதிபதிக்கு அறிவித்தது.
அதே நேரத்தில் தேர்தல் நடத்தப்படாத 9 பகுதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று விளக்கம் அளித்தது. இப்போது தேர்தல்கள் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து இடங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அனுமதி கிடைக்குமா? தமிழக தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு விநியோகச் செய்துக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார். 
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற மாவட்டங்களில், தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக