கூகுள் பே செயலி ஆனது தொடர்ந்து
பல்வேறு சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது, இதற்குமுன்பு தீபாவளி ஸ்டாம்ப்களை
அறிமுகம் செய்ததை தொடர்ந்து அதன் 2030 ஸ்டிக்கர்களை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது
புதிய
2020 ஸ்டாம்ப்
குறிப்பாக அறிமுகமாகியுள்ள புதிய 2020
ஸ்டாம்ப்களின் பட்டியலில் Sunglasses, Toffee, Selfie, Baloon, DJ, Disco
உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. மேலும் இவை அனைத்தும் மூன்று வெவ்வேறு அடுக்குகளை
(கேக் லேயர்கள்) உருவாக்குகின்றன.
உறுதிபடுத்தப்பட்ட
வெகுமதிகள் கிடைக்கும்
மேலும் கூகுள் நிறுவனம் அறிமுகம்
செய்துள்ள இந்த 7ஸ்டாம்ப்களையும் சேகரிப்பவர்களுக்கு கூகுள் பே ஆப்பில்
Rewardsபிரிவின் கீழ் ரூ.2020 வரை உறுதிபடுத்தப்பட்ட வெகுமதிகள் கிடைக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர்
31வரை இருக்கும்
கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள இந்த
சலுகை ஆனது டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி டிசம்பர் 31வரை இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் பே பயனர்கள் நான்கு வழிமுறைகளின் மூலம்
புதிய 2020 ஸ்டாம்ப்களை சேகரிக்க முடியும். ஒவ்வொரு வழிமுறையையும் ஒவ்வொரு நாளும்
அதிகபட்சம் 5ஸ்டாம்ப்களை சேகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான
வழிமுறைகளைப் பார்ப்போம்.
வழிமுறை
வழிமுறை-1
கூகுள் பே பயனருக்கோ அல்லது பிஸ்னஸ்
அல்லது ஸ்பாட்டிற்கு ரூ.98 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கூகுள் ஆப் வழியாக
பரிமாற்றம் செய்தால் கண்டிப்பாக புதிய 2020 ஸ்டாம்ப்களை பெறமுடியும்.
வழிமுறை-2
அடுத்து பயனர்கள் ரூ.300 அல்லது அதற்று
மேற்பட்ட மதிப்புள பில்களை செலுத்துவது அல்லது மொபைல் ரீசார்ஜ் செய்வதின் வழியாக
புதிய 2020ஸ்டாம்ப்களை பெறமுடியும்.
வழிமுறை-3
உங்களுடைய நண்பர்களை கூகுள் பே-விற்கு
இன்வைட் செய்வதின் மூலம் 2020 ஸ்டாம்ப்களை பெறமுடியும். பின்பு உங்களின் referral
code-ஐ பயன்படுத்தி ஒரு நண்பர் தனது முதல்கட்டணத்தை செலுத்தும்போது தான்
உங்களுக்கு 2020 ஸ்டாம்ப் கிடைக்கும்.
வழிமுறை-4
மற்ற கூகுள் பே பயனர்களிடம் இருந்து
ஒரு முத்திரையை பரிசாக பெறுவது அல்லது ஏற்றுக்கொள்வதின் மூலமும் ஒருவர் 2020
ஸ்டாம்ப்களை பெறமுடியும். பின்பு 7 வெவ்வேறு ஸ்டாம்ப்களை சேகரித்து கேக்கை
முடிக்கும்போது கண்டிப்பாக ரூ.202 முதல் ரூ.2020 வரைமதிப்புள்ள பரிசுதொகை கொண்ட
கூகுள் பே ஸ்கடர்ச் கார்டை பெறுவார்கள். மேலும் ரூ.20லட்சம் வரைமதிப்புள்ள லக்கி
டிரா டிக்கெட்டுகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
ஆனால்
ஒரு சிக்கல்
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால்,
கூகுளின் சலுகையின் லக்கி ட்ரா பகுதியானது தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு
செல்லுபடியாகது. ஏனெனில் தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட்களின் மீதான தடை உள்ளது.
இதுவும் ஒருவிதமான லாட்டரி டிக்கெட் போன்றது என்பதால் தமிழ்நாட்டில் உள்ள
பயனர்களால் ரூ.2020 வரையிலான வெகுமதிகளை மட்டுமே பெறமுடியும். லக்கி டிரா வரை
செல்ல முடியாது.
மேலும் இந்த நிதியாண்டில் ஒரு பயனர்
ஏற்கனவே ரூ.9,000 க்கு மேல் சம்பாதித்தால் இந்த சலுகைக்கு தகுதி பெற மாட்டர்கள்.
குறிப்பாக எந்தவொரு கூகுள் பே வெகுமதியுடன் இணைக்கப்பட்ட யுபிஐ-க்கு டெபாசிட்
செய்யப்படும். இருந்தபோதிலும் ஒரு பயனர் யுபிஐ இணைக்கவில்லை என்றால் அவர் அதை
இணைக்க 45நாட்கள் கிடைக்கும். இல்லாவிட்டால் வெகுமதி பறிமுதல் செய்யப்படும் என்பது
குறிப்பிடத்த்ககது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக