சாமியார் கல்கி மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரை
அடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபரில்
தீவிர சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் கல்கிக்கு சொந்தமான
இடங்களில் 44 கோடி ருபாய் இந்திய பணம், 90 கிலோ தங்கம், 20 கோடி வெளிநாட்டு பணம்
என சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மேலும் பினாமி
பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், கல்கி சாமியாருக்கு நெருக்கமானவர்கள், ஊழியர்கள்
பெயரில் வாங்கிய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நிலங்கள் 907 ஏக்கர் என தகவல்
வெளிவந்துள்ளது. இந்த நிலங்கள் கோவை , உதகை, பெல்காம் ஆகிய ஊர்களை சேர்ந்தது
எனவும், தகவல் வெளியாகியுள்ளது இந்த சொத்துக்களை முடக்க அந்தந்த ஊர்களில் உள்ள
அரசு அதிகாரிகளுக்கு நிலம் தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக