Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

கடனை திருப்பி கொடுக்காக காரணத்தால் 2 நாட்கள் வைத்து அடித்த நபர்கள்!சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

கடனை திருப்பி கொடுக்காக காரணத்தால் 2 நாட்கள் வைத்து அடித்த நபர்கள்!சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நபர்!



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரலை அடுத்து உள்ள சிறு தொண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ஆவார்.இவர் ஆழ்வார்த்திருநகரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் சுமார் 1 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
ஆனால் சூழ்நிலையின் காரணமாக பணத்தை கொடுக்கமுடியாததால் கடந்த 14-ம் தேதி கண்ணன் தனது நண்பர்களுடன் இணைந்து பணத்தை கேட்டு ஹமீதை கடத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அவரை விட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகுல் ஹமீது கடந்த வியாழன் கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்நிலையில் சோமசுந்தரம் என்பவை கைது செய்வதோடு கண்ணன் உட்பட ஐந்து நபர்களை தேடிவருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக