Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 21 டிசம்பர், 2019

மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க நினைத்த தந்தை - கொலையில் முடிந்த விபரீதம் !



ன் மகள் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அவரை கொலை செய்துள்ளார் மதுரையைச் சேர்ந்த தந்தை ஒருவர்
 
மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை வியாபாரி முகமது இஸ்மாயில். மேலும் இவர் தையல்கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மூத்த மகள் ரிஸ்வானா பானுவுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் பானு தனது கணவருடன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்ற தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

தனக்குப் பிறகு தனது மகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என அஞ்சிய இஸ்மாயில் அவரை மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார்.  ஆனால் இதற்கு பானு மறுப்பு தெரிவித்துள்ளார.  இது சம்பந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே திருமணம் சம்மந்தமாக பானுவுக்கும் இஸ்மாயிலுக்கும் இடையே தகராறு ஏற்படவே கோபத்தில் இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து தனது மகனின் கழுத்தில் வெட்டியுள்ளார் இஸ்மாயில்.  இதில் பானு அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட இஸ்மாயில் தலைமறைவாகிவிட்டார்.  இதையடுத்து இந்த கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தல்லாகுளம் பகுதியில் தலைமறைவாகியுள்ள இஸ்மாயிலை கைதுசெய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக