Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

கிண்டி பூங்காவில் இருந்து மான்களை இடமாற்றம் செய்யலாம்! நீதிமன்றம் உத்தரவு!

கிண்டி பூங்காவில் இருந்து மான்களை இடமாற்றம் செய்யலாம்! நீதிமன்றம் உத்தரவு!


கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழக வளாகம் என சுற்றித்திரிந்த மான்களில் கடைசி 5 வருடத்தில் 497 மான்கள் உயிரிழந்துள்ளன. நாய்கள், வாகனம் உள்ளிட்ட சில காரணிகளால் மான்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மான்களை இடம் மற்றம் செய்யப்பட்டது.
இத்தகு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் பொதுநலவழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், சேஷாயி ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, வனத்துறையின் மேற்கண்ட விளக்கத்தை ஏற்று அதனை கருத்தில் கொண்டு, முரளிதரனின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.
இருந்தாலும், மான்களின் உடல் நலம் பற்றி உறுதி செய்து அதன் அறிக்கையை ஜனவரி 21இல் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம், வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக