கடினமான
காரியங்களையும் எளிமையாக செய்து முடிக்கும் மீன ராசி அன்பர்களே...!
உங்கள்
ராசி அதிபதி 10ம் இடத்தில் ஆட்சிப்பெற்ற நிலையில் இருக்க இந்த புத்தாண்டு துவங்க
இருக்கிறது. மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
திட்டமிட்ட
காரியத்தில் எண்ணிய இலக்கையும், இலாபத்தையும் அடைவீர்கள். குடும்பத்தில் சுப
நிகழ்ச்சிகளை முன்னின்று செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருத்தலம்
தொடர்பான பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
நண்பர்களின்
மூலம் தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் மற்றும் அதை சார்ந்த
சேமிப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை
அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி
பணிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கட்சிகள் தொடர்பான பொறுப்புகள், உயர்பதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த
செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விளைச்சலை
அதிகப்படுத்த இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில்
தலையிடுவதை தவிர்க்கவும். வேலையாட்கள் தொடர்பான பிரச்சனைகளில் தலையிடுவதை
தவிர்க்கவும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தை
அபிவிருத்தி செய்வதற்கான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் மற்றும்
அவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலின் மூலம் இலாபகரமான சூழல்
அமையும். அலங்கார பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் மூலம் இலாபம் மேம்படும்.
மாணவர்களுக்கு :
பொழுதுப்போக்கு
செயல்பாடுகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்ல மதிப்பெண்ணை பெற வழி
வகுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். உயர் கல்வி
பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான முன்னேற்றம் உண்டாகும்.
பெண்களுக்கு :
எதிர்காலம்
சார்ந்த முடிவுகளில் மற்றவர்களின் பேச்சுக்களுக்கு கட்டுப்படாமல் பெற்றோர்களிடம்
கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மையை அளிக்கும். தாய்வழி உறவுகளின் மூலம்
ஆதரவான சூழல் உண்டாகும். தொழிற்கல்வி பயிலும் மாணவிகள் சற்று கவனத்துடன்
செயல்படவும். நெருக்கமானவர்களுக்கு உதவும்போது சற்று கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
மேல்
அதிகாரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி ஆதரவு கிடைக்கும். உங்களின் மீதான
நம்பிக்கை அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள்.
எதிர்பாராத இடமாற்றம் மற்றும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உழைப்பிற்கான அங்கீகாரம்
காலதாமதமாக கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பால்
சாதித்து முன்னேற்றம் அடைவீர்கள். தடைபட்டு கொண்டிருந்த ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
பரிகாரம் :
நரசிம்மரை
புதன்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர ஆரோக்கியம் மற்றும்
மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக