Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 டிசம்பர், 2019

மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் சதித்திட்டம்.! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்.!

மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் சதித்திட்டம்.! உளவுத்துறை  அதிர்ச்சி தகவல்.!


டெல்லியில் வரும் 22-ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். அதில் டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அந்த கூட்டத்தில் மோடி விளக்கம் அளிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை, எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், டெல்லி போலீசாருக்கும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மோடியை குறி வைத்து தாக்குவதற்காக பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷே முகம்மது தீவிரவாதிகள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்பதை கண்டறிந்த உளவுத் துறை, ராம்லீலா மைதானத்தில் மோடிக்கு அதிக பாதுகாப்பு வேண்டுமாறு உளவுத்துறை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து டெல்லி  முழுவதும் தீவிர பாதுகாப்பில் இருக்குமாறு கேட்டு கொண்டார்.
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள், அரசியல்வாதிகள் சமூக தொண்டர்கள் சார்பாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் போராட்ட களம் கலவர களமாக மாறியுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக